பாடம்:
அலீ (ரலி) அவர்களின் வழியாக வரும் செய்திகள்:
அலீ (ரலி) அவர்கள் அரஃபா நாளின் ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு தக்பீர் சொல்ல ஆரம்பித்து, அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி நாளின் தொழுகையை இமாம் தொழுது முடிக்கும் வரை (தக்பீர் கூறுவதை) நிறுத்த மாட்டார்கள்.
(இமாம் அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி நாளின்) அஸர் தொழுகையை முடித்த பிறகு அலீ (ரலி) அவர்கள் தக்பீர் கூறுவார்கள். (பிறகு தக்பீர் கூறமாட்டார்கள்.)
அறிவிப்பவர்: அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா (ரஹ்)
(ஹாகிம்: 1113)وَأَمَّا حَدِيثُ عَلِيٍّ
فَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَنْبَأَ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، ثنا هَنَّادٌ، ثنا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ شَقِيقٍ، قَالَ:
كَانَ عَلِيٌّ «يُكَبِّرُ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ غَدَاةَ عَرَفَةَ، ثُمَّ لَا يَقْطَعُ حَتَّى يُصَلِّيَ الْإِمَامُ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ، ثُمَّ يُكَبِّرُ بَعْدَ الْعَصْرِ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1113.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1049.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்
2 . அபூபக்ர் பின் இஸ்ஹாக்
3 . அப்துல்லாஹ் பின் முஹம்மத்
4 . ஹன்னாத் பின் ஸரீ
5 . ஹுஸைன் பின் அலீ பின் வலீத்
6 . ஸாயிதா பின் குதாமா
7 . ஆஸிம் பின் பஹ்தலா
8 . ஷகீக் பின் ஸலமா-அபூவாயில்
9 . அலீ (ரலி)
பெருநாட்களிலும், அய்யாமுத் தஷ்ரீக் நாட்களிலும் தக்பீர் கூறுவது குறித்து நபித்தோழர்களின் செயல்களாக வந்துள்ளவை:
1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸாயிதா பின் குதாமா —> ஆஸிம் பின் பஹ்தலா —> ஷகீக் பின் ஸலமா —> அலீ (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5631, ஹாகிம்-1113, குப்ரா பைஹகீ-6275,
- ஸாயிதா பின் குதாமா —> அப்துல்அஃலா பின் ஆமிர் —> அப்துல்லாஹ் பின் ஹபீப் —> அலீ (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5631, அல்அவ்ஸத்-இப்னுல் முன்திர்-2201,
- அல்அவ்ஸத்-இப்னுல் முன்திர்-2201.
الأوسط في السنن والإجماع والاختلاف (4/ 300)
2201 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَارِثِ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَا: ثنا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، قَالَ: ثنا زَائِدَةُ، عَنْ عَبْدِ الْأَعْلَى الثَّعْلَبِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ: «أَنَّهُ كَانَ يُكَبِّرُ مِنْ غَدَاةِ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ، وَيُكَبِّرُ بَعْدَ الْعَصْرِ وَيَقْطَعُ»
…
…
2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-1114.
3 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5633.
4 . உமர் பின் கத்தாப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-1112.
5 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: …
ஆய்வுச் செய்திகள்:
1 . பெருநாள் திடலுக்கு தக்பீர் கூறி செல்லுதல்.
2 . இமாம் வந்த பிறகு, பெருநாள் தொழுகைக்கு முன் தக்பீர் கூறுவதை நிறுத்திவிடுதல்.
பார்க்க:
3 . துல்ஹஜ் 9 முதல் 10 ஆம் நாள் அஸர் வரை கடமையான தொழுகைக்குப் பின்பு தக்பீர் கூறுதல்.
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5633.
4 . துல்ஹஜ் 9 முதல் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களான துல்ஹஜ் 13 ஆம் நாள் வரை கடமையான தொழுகைக்குப் பின்பு தக்பீர் கூறுதல்.
பார்க்க: ஹாகிம்-1113.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-6270,
சமீப விமர்சனங்கள்