இணைவைப்பவர்கள் முஸ்லிம்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால் அவர்கள் மன்னிக்கப்படுவார்களா?
3169. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) நபி (ஸல்) அவர்கள், ‘இங்கேயுள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறினார்கள்.
அவ்வாறே, அவர்கள் ஒன்று திரட்டி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மையைச் சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த யூதர்கள், ‘சரி (உண்மையைச் சொல்கிறோம்)’ என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் தந்தை யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இன்னார்’ என்று பதிலளித்தார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள், ‘பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார் தான்’ என்று கூறினார்கள். அவர்கள், ‘நீங்கள் சொன்னது உண்மை தான்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நான் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘சரி சொல்கிறோம், அபுல்காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்ததைப் போன்றே அதையும் அறிந்து கொள்வீர்கள்’ என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘நரகவாசிகள் யார்?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘நாங்கள் அதில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு, எங்களுக்கு பதிலாக அதில் நீங்கள் புகுவீர்கள்’ என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அதில் நீங்கள் இழிவுபட்டுப் போவீர்களாக! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்கு பதிலாக ஒருபோதும் புக மாட்டோம்’ என்று கூறினார்கள். பிறகு, ‘நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள்.
அவர்கள், ‘சரி, அபுல் காசிமே!’ என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘ஆம் (கலந்திருக்கிறோம்)’ என்று பதில் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கு செய்யாது’ என்று பதிலளித்தார்கள்.
இந்தச் செய்தியுடன் தொடர்புடைய சில செய்திகள் கீழ்க்கண்ட இறைவசனத்தில் இடம்பெற்றுள்ள “அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்” என்ற கருத்துக்கு மாற்றமாக உள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.
தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான். (அல்குர்ஆன்: 5:67)
இந்த வசனத்தின் முழுக் கருத்தை பார்க்கும் போது, “நபி (ஸல்) அவர்கள் தங்களது தூதுத்துவ பணியை நிறைவு செய்யும் வரை அவர்களை மனிதர்களின் தீங்கினால் மரணமடைவதை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பான் என்பதாகும்” என்று சிலர் விளக்கம் கூறி இந்த ஹதீஸ்களை சரியானது என்று கூறுகின்றனர். உதாரணமாக உஹது போரில் நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று வதந்தி பரவும் அளவுக்கு காயப்படுத்தப்பட்டு மயங்கி விழுந்தார்கள். அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான் என்ற கருத்தின்படி இது நடந்திருக்ககூடாது. அல்லது உஹது போரில் நடந்த இந்த நிகழ்வையும் மறுக்க வேண்டும்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
லைஸ் பின் ஸஃத் —> ஸயீத் பின் கைஸான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
ஸுஃப்யான் பின் ஹுஸைன் —> ஸுஹ்ரீ —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8 இறப்பு ஹிஜ்ரி 58 வயது: 66 உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
6 . உம்மு முபஷ்ஷிர் (ரலி), 7 . கஅப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93 இறப்பு ஹிஜ்ரி 179 வயது: 86 முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.(ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:
8 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
Abdul Hakkim on Bukhari-5688: “அஸ்ஸலாமு அலைக்கும். எந்த ஹதீஸ் கேட்கிறீர்கள்?” Oct 19, 08:14
asraa siddiq on Bukhari-5688: “இந்த ஹதீஸ் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது” Oct 18, 18:35
Ummu Huraira on Shuabul-Iman-7379: “அபூதாவூத் உடைய 4010-வது ஹதீஸையும் ஏற்கனவே பார்த்தேன். ஜஸாக்கல்லாஹ் ஹைரன். குற்றாலத்தில் பெண்களுக்கென்று சுவர்களால் மூடப்பட்ட அறைகள் போன்ற ஒரு திரைமறைவு வசதியை ஏற்படுத்தியுள்ளார்கள். அதுவும் திறந்தவெளி…” Oct 12, 11:52
Abdul Hakkim on Shuabul-Iman-7379: “நம்முடைய குடும்ப பெண்கள் மட்டும் குளிக்கும்போது இந்த தடை இல்லை. அப்போதும் கூட உடல் அவயங்களை மறைத்து குளிப்பது முக்கியம். வேறு பொதுவான ஆதாரத்தை தான் ஏற்கனவே…” Oct 11, 10:22
Ummu Huraira on Shuabul-Iman-7379: “வேறு பொதுவான ஆதாரங்களின்படி இது தடைதான் என்றால் அந்த ஆதாரங்களைத் தரமுடியுமா? இது சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகள் ஏதாவது உள்ளதா?” Oct 11, 02:56
Ummu Huraira on Shuabul-Iman-7379: “பொதுக் குளிப்பிடங்கள் என்றால், நமக்கு தெரிந்தவர்களின் தோட்டங்களில் உள்ள போர் தண்ணீருக்கான தொட்டியில், பல பெண்கள் சேர்ந்துக் குளிக்கும் வசதியுடன் திரைகள் எல்லாம் போடப்பட்டுள்ள, அல்லது சுற்றியுள்ள…” Oct 11, 02:51
Abdul Hakkim on Shuabul-Iman-7379: “வ அலைக்கும் ஸலாம். பெண்கள் ஆடை அணிந்து குளித்தாலும் துணி ஈரத்தினால் அவர்களின் உடல்பகுதிகள் தெரியும், மேற்கண்ட கருத்தில் வரும் செய்திகளில் விமர்சனம் உள்ளது. என்றாலும் வேறு…” Oct 10, 19:47
Ummu Huraira on Shuabul-Iman-7379: “அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸ் பற்றிய ஆய்வுகள் முடிந்துவிட்டதா? இதன் தரம் என்ன? இதில், “அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட உங்களது பெண்களில் எவரும் (பல…” Oct 10, 12:39
Abdul Hakkim on Bukhari-3835: “அஸ்ஸலாமு அலைக்கும். சில செய்திகளில் இந்தப் பெண் அல்லாஹ்விடம் துஆச் செய்தேன் என்று கூறியதாக வந்துள்ளது. பார்க்க: புகாரி-439.” Oct 4, 17:30
Syed Ibrahim on Bukhari-3835: “BUhari 3835 – இந்தச் சம்பவம் பற்றிய விரிவான செய்தி ஏதும் உண்டா?” Oct 4, 15:41
சமீப விமர்சனங்கள்