பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த (நபித்தோழர்) ஒருவர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய கையில் அல்லது அவர்களுடைய கையில் (விரல்களை மடக்கி) பின்வருமாறு எண்ணிக் கூறினார்கள்:
1 . ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன் என்று துதிப்பது) நன்மையின் தராசில் பாதியை நிரப்பிவிடும்.
2 . அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! என்று துதிப்பது) நன்மையின் தராசை நிரப்பிவிடும்.
3 . அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன் என்று துதிப்பது) வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்டதை நிரப்பிவிடும்.
4 . நோன்பு பொறுமையின் பாதியாகும்.
5 . தூய்மை இறைநம்பிக்கையின் பாதியாகும்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் “ஹஸன்” எனும் தரத்தைச் சேர்ந்ததாகும். இந்த ஹதீஸை அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து ஷுஅபா, ஸுஃப்யான் ஸவ்ரீ ஆகியோரும் அறிவித்துள்ளனர்.
(திர்மிதி: 3519)حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ جُرَيٍّ النَّهْدِيِّ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي سُلَيْمٍ، قَالَ:
عَدَّهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِي أَوْ فِي يَدِهِ: «التَّسْبِيحُ نِصْفُ المِيزَانِ، وَالْحَمْدُ يَمْلَؤُهُ، وَالتَّكْبِيرُ يَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، وَالصَّوْمُ نِصْفُ الصَّبْرِ، وَالطُّهُورُ نِصْفُ الإِيمَانِ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ. وَقَدْ رَوَاهُ شُعْبَةُ، وَسُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3441.
Tirmidhi-Shamila-3519.
Tirmidhi-Alamiah-3441.
Tirmidhi-JawamiulKalim-3465.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்-முஹம்மத் பின் ஈஸா (3. பலமானவர்).
2 . ஹன்னாத் பின் ஸரீ பின் முஸ்அப் (3. பலமானவர்).
3 . ஸல்லாம் பின் ஸுலைம்-அபுல்அஹ்வஸ் (3. பலமானவர்).
4 . அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ-அம்ர் பின் அப்துல்லாஹ் (3. பலமானவர்).
5 . ஜுரய்யு பின் குலைப்-அல்கூஃபீ (4. நடுத்தரமானவர்).
6 . பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபித்தோழர் (1. நபித்தோழர்).
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10156-ஜுரய்யு பின் குலைப்-அல்கூஃபீ அவர்கள் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதால் இது ஹஸன் தர அறிவிப்பாளர்தொடராகும். மேலும் இந்தக் கருத்து வேறு சரியான செய்திகளில் வந்திருப்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.
பார்க்க: ராவிபெயர்-ஜுரய்யு பின் குலைப்-அல்கூஃபீ.
تقريب التهذيب (ص139):
921- جري ابن كليب النهدي الكوفي عن رجل من بني سليم له صحبة مقبول من الثالثة أيضا ت
பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபித்தோழரிடமிருந்து அறிவிக்கும் ஜுரய்யு பின் குலைப் அந்நஹ்தீ அல்கூஃபீ அவர்கள் மக்பூல் (பிறர் சார்புடையவர்) எனும் தரத்தில் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-921)
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (13/ 284)
3180- وسئل عن حديث جري النهدي، عن رجل من بني سليم، عن النبي صلى الله عليه وسلم، قال: سبحان الله نصف الميزان، والحمد لله تملأ الميزان، والله أكبر تملأ ما بين السماء والأرض، والوضوء نصف الإيمان، والصوم نصف الصبر.
فَقَالَ: يَرْوِيهِ أَبُو إِسْحَاقَ السَّبِيعِيُّ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فرواه الثوري، وجرير بن حازم، وعبد الله بن المختار، وأبو الأحوص، وابن عيينة، عن أبي إسحاق، عن جري النهدي، عن رجل من بني سليم، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَكَذَلِكَ رواه يونس بن أبي إسحاق، وعاصم بن أبي النجود، عن جري النهدي، عن رجل من بني سليم.
ورواه ابن شوذب، عن أبي إسحاق، عن رجل من بني سليم، فلم يذكر فيه: جريا.
والأول أصح.
1 . இதன் அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலரும் அபூஇஸ்ஹாக் —> ஜுரய்யு பின் குலைப் —> பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த நபித்தோழர்என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
2 . அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு ஷவ்தப் என்பவர் மட்டும் அபூஇஸ்ஹாக் அவர்களுக்கு அடுத்து ஜுரய்யு அவர்களை கூறாமல் அறிவித்துள்ளார். இவற்றில் முதல் வகை அறிவிப்பாளர்தொடரே சரியானது என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-3180)
2 . இந்தக் கருத்தில் பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:
1 . அபூஇஸ்ஹாக் அவர்களின் அறிவிப்புகள்:
- மஃமர் —> அபூஇஸ்ஹாக் —> ஜுரய்யு பின் குலைப் —> பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த நபித்தோழர்
பார்க்க: அல்ஜாமிஃ-மஃமர்-20582, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21506,
جامع معمر بن راشد (11/ 296)
20582 – أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ جُرَيٍّ النَّهْدِيِّ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي سُلَيْمٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «التَّسْبِيحُ نِصْفُ الْمِيزَانِ، وَالْحَمْدُ يَمْلُؤهُ، وَالتَّكْبِيرُ يَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَالصَّوْمُ نِصْفُ الصَّبْرِ، وَالطُّهُورُ نِصْفُ الْإِيمَانِ»
..
- ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> அபூஇஸ்ஹாக் —> ஜுரய்யு பின் குலைப் —> பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த நபித்தோழர்
பார்க்க: அஹாதீஸ்-ஸரீ பின் யஹ்யா-47, ஷுஅபுல் ஈமான்- 622,
أحاديث السري بن يحيى (ص: 48)
47 – حَدَّثَنَا السَّرِيُّ، قَالَ: حَدَّثَنَا قَبِيصَةُ، أنا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: أَخْبَرَنِي جُرَيٌّ النَّهْدِيُّ، قَالَ: لَقِيَنِي رَجُلٌ مِنْ بَنِي سُلَيْمٍ بِالْكُنَاسَةِ، فَقَالَ لِي: عَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ فِي يَدِي أَوْ فِي يَدِهِ خَمْسًا: «التَّسْبِيحُ نِصْفُ الْمِيزَانِ، وَالْحَمْدُ لِلَّهِ تَمْلؤُهُ، وَالتَّكْبِيرُ يَمْلأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، وَالصَّوْمُ نِصْفُ الصَّبْرِ، وَالطُّهُورُ نِصْفُ الإِيمَانِ»
…
- ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
—> அபூஇஸ்ஹாக் —> ஜுரய்யு பின் குலைப் —> பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த நபித்தோழர்
பார்க்க: அஹ்மத்-18287, 23139, தாரிமீ-680, திர்மிதீ-3519, ஷுஅபுல் ஈமான்- 3297,
- ஹம்மாத் அபஹ் —> அபூஇஸ்ஹாக் —> ஜுரய்யு பின் குலைப் —> பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த நபித்தோழர்
பார்க்க: தஃளீமு கத்ரிஸ் ஸலாஹ்-432,
تعظيم قدر الصلاة لمحمد بن نصر المروزي (1/ 430)
432 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَنَا حَمَّادٌ الْأَبَحُّ أَبُو بَكْرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنْ جُرَيٍّ النَّهْدِيِّ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي سُلَيْمٍ قَالَ: عَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كَفِّهِ خَمْسًا: «سُبْحَانَ اللَّهِ نِصْفُ الْمِيزَانِ، وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَاللَّهُ أَكْبَرُ تَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَالْوضُوءُ نِصْفُ الْإِيمَانِ، وَالصَّوْمُ نِصْفُ الصَّبْرِ»
…
- அபுல்அஹ்வஸ் —> அபூஇஸ்ஹாக் —> ஜுரய்யு பின் குலைப் —> பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த நபித்தோழர்
பார்க்க: திர்மிதீ-3519,
- ஜரீர் பின் ஹாஸிம் —> அபூஇஸ்ஹாக் —> ஜுரய்யு பின் குலைப் —> பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த நபித்தோழர்
பார்க்க: தபகாதுல் முஹத்திஸீன்-,
طبقات المحدثين بأصبهان والواردين عليها (4/ 13)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَهْلٍ , قال: ثنا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ , قال: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ , قال: ثنا جَرِيرُ بْنُ حَازِمٍ , عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ , قال: ثني جُرَيُّ الْهِنْدِيّ ُ، قال: أَلا أُحَدِّثُكَ حَدِيثًا حَدَّثَنِيهِ بَعْضُ , أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ بِالْكُنَاسَةِ، قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، فَعَقَدَهُ أَوْ عَقَدَ يَدَهُ، فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ نِصْفُ الْمِيزَانِ , وَالْحَمْدُ لِلَّهِ تَمْلأُ الْمِيزَانَ , وَاللَّهُ أَكْبَرُ تمْلأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ , وَالإِيمَانُ نِصْفُ الصَّبْرِ»
…
- ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
இஸ்ராயீல் பின் யூனுஸ் —> அபூஇஸ்ஹாக் —> ஜுரய்யு பின் குலைப் —> பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த நபித்தோழர்
பார்க்க: அத்துஆ-தப்ரானீ-1734,
الدعاء للطبراني (ص: 492)
1734 – حَدَّثَنَا يُوسُفُ الْقَاضِي، ثنا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، أَنْبَأَ شُعْبَةُ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنِ الثَّوْرِيِّ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ الضَّبِّيُّ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، ثنا إِسْرَائِيلُ، كُلُّهُمْ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ جُرَيٍّ النَّهْدِيِّ، عَنْ شَيْخٍ مِنْ بَنِي سُلَيْمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِهِ فَإِمَّا عَقَدَهُنَّ بِيَدِهِ وَإِمَّا عَقَدَهُنَّ بِيَدِ السُّلَمِيِّ قَالَ: «سُبْحَانَ اللَّهِ نِصْفُ الْمِيزَانِ، وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَاللَّهُ أَكْبَرُ يَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَالْوُضُوءُ نِصْفُ الْإِيمَانِ، وَالصِّيَامُ نِصْفُ الصَّبْرِ» وَاللَّفْظُ لِحَدِيثِ شُعْبَةَ وَالْآخَرُونُ نَحْوَهُ
…
2 . யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக் அவர்களின் அறிவிப்புகள்:
வகீஃ, அபூகதன், இப்னு உயைனா, அபூநுஐம் —> யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக் —> ஜுரய்யு பின் குலைப் —> பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த நபித்தோழர்
பார்க்க: அஹ்மத்-23073, 23160, அல்ஈமான்-அத்னீ-58, அஸ்ஸுன்னா-இப்னுல் கல்லால்-1511, தஃளீமு கத்ரிஸ் ஸலாஹ்-434, ஃபவாஇத் ஸலாஸா-9,
- அல்ஈமான்-அத்னீ-58.
الإيمان للعدني (ص: 124)
58 – حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ جُرَيَّ النَّهْدِيَّ، يُحَدِّثُ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي سُلَيْمٍ، قَالَ: عَدَّهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِي، قَالَ: «الْوُضُوءُ نِصْفُ الْإِيمَانِ، وَالصِّيَامُ نِصْفُ الصَّبْرِ، وَسُبْحَانَ اللَّهِ نِصْفُ الْمِيزَانِ، وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَؤُهُ، وَاللَّهُ أَكْبَرُ تَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»
…
- அஸ்ஸுன்னா-இப்னுல் கல்லால்-1511.
السنة لأبي بكر بن الخلال (5/ 23)
1511 – حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ: ثنا وَكِيعٌ، قَالَ: ثنا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ جُرَيَّ بْنَ كُلَيْبٍ النَّهْدِيَّ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي سُلَيْمٍ، قَالَ: عَدَّهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِي , أَوْ قَالَ: فِي يَدِهِ: «التَّسْبِيحُ نِصْفُ الْمِيزَانِ، وَالْحَمْدُ تَمْلَؤُهُ، وَالتَّكْبِيرُ تَمْلَأُ مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَالصَّوْمُ نِصْفُ الصَّبْرِ، وَالطُّهُورُ نِصْفُ الْإِيمَانِ»
…
- தஃளீமு கத்ரிஸ் ஸலாஹ்-432.
تعظيم قدر الصلاة – محمد بن نصر المروزي (1/ 432):
434 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، ثنا أَبُو نُعَيْمٍ، ثنا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ جُرَيًّا النَّهْدِيَّ، قَالَ: يَا أَبَا إِسْحَاقَ، لَقِيتُ شَيْخًا مِنْ بَنِي سُلَيْمٍ بِالْكُنَاسَةِ فَحَدَّثَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَدَّ خَمْسًا فِي يَدِهِ فَقَالَ: «الطُّهُورُ نِصْفُ الْإِيمَانِ»
…
- ஃபவாஇத் ஸலாஸா-9.
مجموع فيه ثلاثة أجزاء حديثية – جرار (ص30):
9 – أخبرنا عليُّ بنُ عبدِ العزيزِ: حدثنا أبو نُعيمٍ: حدثنا يونسُ بنُ أبي إسحاقَ قالَ: سمعتُ جُرَي النَّهديَّ قالَ: يا أبا إسحاقَ، لقيتُ شيخاً مِن بَني سُليمٍ بالكُناسةِ، فحدَّثني أنَّ رسولَ اللهِ صلى الله عليه وسلم عدَّ خمساً في يدِهِ – أو في يدِي -، قالَ: «التَّسبيحُ نصفُ الميزانِ، والحمدُ يملؤُهُ، والتكبيرُ يملأُ ما بينَ السماءِ والأرضِ، والصومُ نصفُ الصبرِ، والطُّهورُ نصفُ الإيمانِ»
…
3 . ஆஸிம் அவர்களின் அறிவிப்புகள்:
ஆஸிம் பின் அபுன்னஜூத் —> ஜுரய்யு பின் குலைப் —> பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த நபித்தோழர்
பார்க்க: அஹ்மத்-23099, அல்ஆஹாத்-இப்னு அபூஆஸிம்-2920,
…
…
من حديث سفيان الثوري – ت عامر صبري (ص63):
48- حدثنا قَبِيصَة ، حدثنا سفيان عن أبي إسحاق قال: أخبرني جري النهدي قال بعثني رجل من بني سليم بالكناسة فقال عبد الله بن مسعود رضي الله عنه ، عد رسول الله صلى الله عليه وسلم في يدي أو في يده خمسا التسبيح نصف الميزان التسبيح نصف الميزان ، والحمد لله يملؤه ، والتكبير يملأ ما بين السماوات السماء والأرض ، والصوم نصف الصبر ، والطهور نصف الإيمان.
…
من حديث سفيان الثوري – ت عامر صبري (ص158):
289- عن أبي إسحاق عن جري النهدي عن رجل من بني سليم قال: قال رسول الله صلى الله عليه وسلم الصوم نصف الصبر.
من حديث سفيان الثوري – ت عامر صبري (ص165):
305- عن أبي إسحاق عن جري النهدي عن رجل من بني سليم عبد الله بن مسعود رضي الله عنه ، قال عد رسول الله صلى الله عليه وسلم في يدي أو في يده خمسا التسبيح نصف [الميزان] والحمد لله تملأه تملؤه والتكبير يملأ ما بين السَّماء والأرض والصوم نصف الصبر والطهور نصف الإيمان.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-280.
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்களுக்கு உள்ள தகவல்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
இந்த ஹதீஸை நபி ﷺ அவர்களிடம் இருந்து அறிவிப்பவர் பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என்று கூறப்பட்டுள்ளது
இவர் நபிதோழரா அல்லது தாபியியா என்று கூறப்படவில்லை. மேலும் இவர் நல்லவரா கேட்டவரா என்பதும் அறிபட முடியவில்லை அதனால் இவர் மஜ்கூல் ஐன் (யாரென அறியப்படாதவர்) அதனால் இது பலவீனமான செய்தி
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.