Author: Farook

Musnad-Ahmad-7035

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7035.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எனக்கு விருப்பமானவரும், மறுமையின் சபையில் என்னிடம் நெருக்கத்திற்குரியவரும் யாரெனில் நல்ல பண்புகளைக் கொண்டவரே….

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَجْلِسٍ: «أَلَا أُحَدِّثُكُمْ بِأَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ؟» ثَلَاثَ مَرَّاتٍ يَقُولُهَا، قَالَ: قُلْنَا: بَلَى، يَا رَسُولَ اللَّهِ، قَالَ: فَقَالَ: «أَحْسَنُكُمْ أَخْلَاقًا»


Al-Adabul-Mufrad-272

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

272.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எனக்கு விருப்பமானவரும், மறுமையின் சபையில் என்னிடம் நெருக்கத்திற்குரியவரும் யாரெனில் நல்ல பண்புகளைக் கொண்டவரே….

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«أُخْبِرُكُمْ بِأَحَبِّكُمْ إِلَيَّ، وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ؟» فَسَكَتَ الْقَوْمُ، فَأَعَادَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، قَالَ الْقَوْمُ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «أَحْسَنُكُمْ خُلُقًا»


Musnad-Ahmad-6735

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

6735.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எனக்கு விருப்பமானவரும், மறுமையின் சபையில் என்னிடம் நெருக்கத்திற்குரியவரும் யாரெனில் நல்ல பண்புகளைக் கொண்டவரே….

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«أَلَا أُخْبِرُكُمْ بِأَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ؟» فَسَكَتَ الْقَوْمُ، فَأَعَادَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، قَالَ الْقَوْمُ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «أَحْسَنُكُمْ خُلُقًا»


Kubra-Bayhaqi-8401

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8401. நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும் கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்” எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


حِينَ صَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ , قَالُوا: يَا رَسُولَ اللهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ صُمْنَا يَوْمَ التَّاسِعِ إِنْ شَاءَ اللهُ “. قَالَ: فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.


Almujam-Alkabir-10785

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10785. நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும் கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்” எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


صَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ، وَأَمَرَ بِصِيَامِهِ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، يَوْمًا يُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ عَامُ الْمُقْبِلِ إِنْ شَاءَ اللهُ صُمْنَا التَّاسِعَ» ، فَلَمْ يَأْتِ عَامُ الْمُقْبِلِ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Abu-Dawood-2445

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2445. நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும் கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்” எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


حِينَ صَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَنَا بِصِيَامِهِ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ صُمْنَا يَوْمَ التَّاسِعِ»، فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musnad-Ahmad-15923

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

15923. ஸலமா பின் யஸீத் அல்ஜூஅஃபி (ரலி) கூறியதாவது:

நானும், என் சகோதரரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்கள் தாயார் முலைக்கா (அறியாமைக் காலத்தில்) உறவைப் பேணியும், விருந்தாளியை உபசரித்தும் வந்தார்கள். மேலும் இன்னின்ன நன்மைகளை எல்லாம் செய்து வந்தார்கள். அவை என் தாயாருக்கு  நன்மை தருமா?’’ என்று கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நன்மை தராது என்று கூறினார்கள்.

அறியாமைக் காலத்தில் எங்கள் சகோதரி ஒருவரை உயிருடன் புதைத்திருந்தார். இது அவர்களுக்கு ஏதும் தீங்கு தருமா? என்று கேட்ட போது ‘‘(குழந்தையை உயிருடன்) புதைப்பவளும், புதைக்கப்பட்டவளும் நரகத்தில் தான் இருப்பார்கள். புதைத்தவள் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ் அவளை மன்னித்தாலே தவிர’’ என்று பதிலளித்தார்கள்.


انْطَلَقْتُ أَنَا وَأَخِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمَّنَا مُلَيْكَةَ كَانَتْ تَصِلُ الرَّحِمَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتَفْعَلُ، وَتَفْعَلُ هَلَكَتْ فِي الْجَاهِلِيَّةِ، فَهَلْ ذَلِكَ نَافِعُهَا شَيْئًا؟ قَالَ: «لَا» قَالَ: قُلْنَا: فَإِنَّهَا كَانَتْ وَأَدَتْ أُخْتًا لَنَا فِي الْجَاهِلِيَّةِ، فَهَلْ ذَلِكَ نَافِعُهَا شَيْئًا؟ قَالَ: «الْوَائِدَةُ وَالْمَوْءُودَةُ فِي النَّارِ، إِلَّا أَنْ تُدْرِكَ الْوَائِدَةُ الْإِسْلَامَ، فَيَعْفُوَ اللَّهُ عَنْهَا»


Ibn-Hibban-5676

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5676. உர்வா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான், ‘‘முஃமின்களின் தாயாரே! நபியவர்கள் தங்களது வீட்டில் இருக்கும் போது என்னென்ன செய்வார்கள்?’’ என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘‘தம் வீட்டாருக்குத் தேவையான வேலைகளைச் செய்து வந்தார்கள். மேலும் தமது செருப்பைத் தாமே தைத்துக் கொள்வார்கள். தமது ஆடை (கிழிந்திருந்தால்) தாமே தைத்துக் கொள்வார்கள். மேலும் தமது (தண்ணீர் இரைக்கும்) வாளியைச் சரிசெய்வார்கள்’’ என்று சொன்னார்கள்.


قُلْتُ لِعَائِشَةَ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَيُّ شَيْءٍ كَانَ يَصْنَعُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ عِنْدَكِ؟ قَالَتْ: «مَا يَفْعَلُ أَحَدُكُمْ فِي مِهْنَةِ أَهْلِهِ، يَخْصِفُ نَعْلَهُ، وَيَخِيطُ ثَوْبَهُ، وَيَرْقَعُ دَلْوَهُ»


Ibn-Hibban-3239

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3239. …(மனிதனுக்கு என்று இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட) உணவென்பது, அவனது மரணம் அவனைத் தேடுவது போன்று தேடுகிறது. இறுதியாக அவனுக்கென்று (கடைசி) கடைசியாக எந்த உணவு இறைவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அது அவனை அடையும் வரை மனிதன் மரணிக்கமாட்டான்…

 


«لَا تَسْتَبْطِئُوا الرِّزْقَ، فَإِنَّهُ لَنْ يَمُوتَ الْعَبْدُ حَتَّى يَبْلُغَهُ آخِرُ رِزْقٍ هُوَ لَهُ، فَأَجْمِلُوا فِي الطَّلَبِ: أَخَذِ الْحَلَالِ، وَتَرَكِ الْحَرَامِ»


Abu-Dawood-4932

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4932. தபூக் அல்லது கைபர் யுத்தம் முடிந்து நபியவர்கள் (வீட்டிற்கு) வந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் அலமாரியில் திரையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது காற்றடித்து அத்திரையின் ஒரு பகுதி விலகி ஆயிஷா அவர்களின் விளையாட்டுப் பொம்மைகள் (பிள்ளைகள்) வெளியில் தெரிந்தது. அப்போது நபியவர்கள், ‘‘ஆயிஷாவே இது என்ன?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘எனது பொம்மைகள் (பிள்ளைகள்)’’ என்று கூறினார்.

அவைகளுக்கிடையில் நபியவர்கள் இரண்டு இறக்கையுள்ள குதிரையைக் கண்டார்கள். அப்போது நபியவர்கள், ‘‘நடுவில் இருக்கிற இது என்ன?’’ என்று கேட்டதற்கு, ஆயிஷா (ரலி), குதிரை என்றார்கள். ‘‘அதற்கு மேலிருப்பது என்ன?’’ என்று கேட்டதற்கு, இறக்கை என்று பதிலளித்தார்கள். உடனே நபியவர்கள் ‘‘குதிரைக்கு இறக்கைகள் இருக்குமா?’’ என்று கேட்டதற்கு, ‘‘சுலைமான் நபியவர்கள் வைத்திருந்த குதிரைகளுக்கு இறக்கை இருந்தது என்பதைக் கேள்விப்பட்டதில்லையா?’’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். அதனைக் கேட்ட நபியவர்கள், அவர்களது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ، أَوْ خَيْبَرَ وَفِي سَهْوَتِهَا سِتْرٌ، فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ، فَقَالَ: «مَا هَذَا يَا عَائِشَةُ؟» قَالَتْ: بَنَاتِي، وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ، فَقَالَ: «مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ؟»  قَالَتْ: فَرَسٌ، قَالَ: «وَمَا هَذَا الَّذِي عَلَيْهِ؟» قَالَتْ: جَنَاحَانِ، قَالَ: «فَرَسٌ لَهُ جَنَاحَانِ؟» قَالَتْ: أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلًا لَهَا أَجْنِحَةٌ؟ قَالَتْ: فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ


Next Page » « Previous Page