Author: Abdul Hakkim

Musnad-Ahmad-17371

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

17371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆசைகளிலும், பாவங்களிலும் நாட்டம் இல்லாத ஒரு இளைஞனைப் பார்த்து அல்லாஹ் வியப்படைகிறான்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


«إِنَّ اللَّهَ لَيَعْجَبُ مِنَ الشَّابِّ لَيْسَتْ لَهُ صَبْوَةٌ»


Hakim-4484

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4484. “அல்லாஹ்வே! உமர் பின் கத்தாபைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும். புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்யவில்லை. இந்தக் கருத்தில் ஆயிஷா பின்த் ஸித்தீக் (ரலி) வழியாக வரும் செய்தியும் சரியானதே.


«اللَّهُمَّ أَعِزَّ الْإِسْلَامَ بِعُمَرَ»


Musnad-Ahmad-5696

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5696. “அல்லாஹ்வே! அபூஜஹ்ல் பின் ஹிஷாம் அல்லது உமர் பின் கத்தாப் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள்.

அவ்விருவரில் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமானவராக ஆகிவிட்டார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«اللَّهُمَّ أَعِزَّ الْإِسْلَامَ بِأَحَبِّ هَذَيْنِ الرَّجُلَيْنِ إِلَيْكَ بِأَبِي جَهْلٍ أَوْ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ، فَكَانَ أَحَبُّهُمَا إِلَى اللَّهِ عُمَرَ بْنَ الْخَطَّابِ»


Bazzar-5862

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5862. “அல்லாஹ்வே! உமர் பின் கத்தாப் அல்லது அபூஜஹ்ல் பின் ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


اللَّهُمَّ أَعِزَّ الإِسْلامَ بِأَحَبِّ هَذَيْنِ الرَّجُلَيْنِ إِلَيْكَ، بعُمَر بْنِ الْخَطَّابِ، أَوْ بِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ.


Hakim-6129

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6129.


أَنَا ابْنُ سُبُعِ الْإِسْلَامِ، أَسْلَمَ أَبِي سَابِعَ سَبْعَةٍ، وَكَانَتْ دَارُهُ عَلَى الصَّفَا وَهِيَ الدَّارُ الَّتِي كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ فِيهَا فِي الْإِسْلَامِ، وَفِيهَا دَعَا النَّاسَ إِلَى الْإِسْلَامِ، فَأَسْلَمَ فِيهَا قَوْمٌ كَثِيرٌ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الِاثْنَيْنِ فِيهَا: «اللَّهُمَّ أَعِزَّ الْإِسْلَامَ بِأَحَبِّ الرَّجُلَيْنِ إِلَيْكَ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَوْ عَمْرِو بْنِ هِشَامٍ» ، فَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ مِنَ الْغَدِ بَكْرَةً، فَأَسْلَمَ فِي دَارِ الْأَرْقَمِ، وَخَرَجُوا مِنْهَا وَكَبَّرُوا وَطَافُوا بِالْبَيْتِ ظَاهِرِينَ، وَدُعِيَتْ دَارُ الْأَرْقَمِ دَارُ الْإِسْلَامِ، وَتَصَدَّقَ بِهَا الْأَرْقَمُ عَلَى وَلَدِهِ، فَقَرَأْتُ نُسْخَةَ صَدَقَةِ الْأَرْقَمِ بِدَارِهِ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هَذَا مَا قَضَى الْأَرْقَمُ فِي رَبْعِهِ مَا حَازَ الصَّفَا، أَنَّهَا صَدَقَةٌ بِمَكَانِهَا مِنَ الْحَرَمِ لَا تُبَاعُ، وَلَا تُورَّثُ شَهِدَ هِشَامُ بْنُ الْعَاصِ، وَفُلَانٌ مَوْلَى هِشَامِ بْنِ الْعَاصِ، قَالَ: فَلَمْ تَزَلْ هَذِهِ الدَّارُ صَدَقَةً قَائِمَةً فِيهَا وَلَدُهُ يَسْكُنُونَ وَيُؤَاجِرُونَ وَيَأْخُذُونَ عَلَيْهَا حَتَّى كَانَ زَمَنُ أَبِي جَعْفَرٍ


Musnad-Ahmad-4362

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4362.


فَضَلَ النَّاسَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ بِأَرْبَعٍ: بِذِكْرِ الْأَسْرَى يَوْمَ بَدْرٍ، أَمَرَ بِقَتْلِهِمْ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {لَوْلَا كِتَابٌ مِنَ اللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَا أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌ} [الأنفال: 68] ، وَبِذِكْرِهِ الْحِجَابَ، أَمَرَ نِسَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَحْتَجِبْنَ، فَقَالَتْ لَهُ زَيْنَبُ: وَإِنَّكَ عَلَيْنَا يَا ابْنَ الْخَطَّابِ، وَالْوَحْيُ يَنْزِلُ عَلَيْنَا فِي بُيُوتِنَا؟ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ} [الأحزاب: 53] وَبِدَعْوَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُ: «اللَّهُمَّ أَيِّدِ الْإِسْلَامَ بِعُمَرَ» وَبِرَأْيِهِ فِي أَبِي بَكْرٍ، كَانَ أَوَّلَ النَّاسِ بَايَعَهُ


Ibn-Majah-3685

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3685.


«مَا أَظُنُّ رَجُلًا يَنْتَقِصُ أَبَا بَكْرٍ وَعُمَرَ يُحِبُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Tirmidhi-3683

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(துணைப் பாடம்)

3683. “அல்லாஹ்வே! அபூஜஹ்ல் பின் ஹிஷாம் அல்லது உமர் பின் கத்தாப் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள்.

காலை நேரத்தில் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த அறிவிப்பாளர்தொடர் “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதில் இடம்பெறும் நள்ர் பின் அப்துர்ரஹ்மான்-அபூஉமர் என்பவரை சில ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். இவர் முன்கரான செய்திகளை அறிவிப்பவர் ஆவார்.


«اللَّهُمَّ أَعِزَّ الإِسْلَامَ بِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ أَوْ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ» قَالَ: فَأَصْبَحَ فَغَدَا عُمَرُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ


Tirmidhi-3681

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

அபூஹஃப்ஸ்-உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்:

3681. “அல்லாஹ்வே! அபூஜஹ்ல் பின் ஹிஷாம் அல்லது உமர் பின் கத்தாப் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள்.

அவ்விருவரில் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமானவராக ஆகிவிட்டார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்னு உமர் (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தி “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«اللَّهُمَّ أَعِزَّ الإِسْلَامَ بِأَحَبِّ هَذَيْنِ الرَّجُلَيْنِ إِلَيْكَ بِأَبِي جَهْلٍ أَوْ بِعُمَرَ بْنِ الخَطَّابِ»

قَالَ: وَكَانَ أَحَبَّهُمَا إِلَيْهِ عُمَرُ


Nasaayi-3348

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3348.


«كَانَ الصَّدَاقُ إِذْ كَانَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَةَ أَوَاقٍ»


Next Page » « Previous Page