ஆயித் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சியின் தொடக்கக் காலத்தில், நான் ஒரு நாள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே இருபதுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைப் பேசிக் கொண்டிருந்தனர். அந்த சபையில், மிகவும் இளமையான, நல்ல நிறம் கொண்ட, அழகிய முகமும், இனிமையான பேச்சும் கொண்ட ஒரு வாலிபர் இருந்தார். அவர்களிடையே ஹதீஸ் குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால், அவர்கள் அந்த வாலிபரிடமே அதைக் கேட்பார்கள்; அவரும் அவர்களுக்குத் தெளிவான விளக்கத்தைத் தருவார்.
நான் அந்த சபையில் (சிறிதுநேரம்) அமர்ந்திருந்தபோது, தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது; அது அவர்களைப் பிரித்துவிட்டது. அந்த இரவு எனக்கு ஒரு நோயினாலோ அல்லது முக்கியமான காரியத்தினாலோ ஏற்பட்ட துன்பத்தை விட, மீண்டும் அந்த இளைஞரை சந்திக்கும் ஆவலில் கழிந்த அந்த இரவு மிக நீண்டதாக எனக்குத் தெரிந்தது. விடிந்ததும் நான் பள்ளிவாசலுக்குச் சென்று அவரைத் தேடினார், ஆனால் யாரையும் காணவில்லை. பின்னர் மதியத்திற்குப் பிறகு மீண்டும் சென்றேன்; அங்கே நேற்று நான் ஹதீஸ்களைக் கேட்டுப் பழகிய அந்த வாலிபர், பள்ளிவாசலின் தூண் ஒன்றின் அருகில் தொழுது கொண்டிருப்பதைக் கண்டேன்.
நான் அந்தத் தூணின் அருகே சென்று நின்றேன். அந்த வாலிபர் தொழுகையை முடித்துவிட்டு, அதே தூணில் சாய்ந்து அமர்ந்தார். அவர் ஒரு கட்டத்தில், “எனக்கு ஏதோ தேவை இருக்கிறது” என்பதை உணர்ந்தார். அப்போது நான், “அல்லாஹ் உங்களைச் சீர்படுத்தட்டும், நீங்கள் தொழுது முடித்துவிட்டீர்களா?” என்று கேட்டேன். அந்த வாலிபர், “ஆம்” என்றார். உடனே நான் அவருக்கு எதிரே அமர்ந்து கொண்டேன். இருவரும் எதைப் பற்றியும் பேசவில்லை. தொழுகை நேரம் வந்து அவரைப் பிரித்துவிடுமோ என்று நான் அஞ்சினேன்.
பின்னர் நான் அந்த வாலிபரிடம், “அல்லாஹ் உங்களைச் சீர்படுத்தட்டும், எனக்கு ஒரு ஹதீஸைக் கூறுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் உங்களை நேசிக்கிறேன், உங்கள் பேச்சையும் நேசிக்கிறேன்” என்றேன். அதற்கு அந்த வாலிபர், “அல்லாஹ்வின் மீது ஆணையாகவா, நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள், என் பேச்சையும் நேசிக்கிறீர்களா?” என்று கேட்டார். நான், “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை, அவன் மீது ஆணையாக, நான் உங்களை நேசிக்கிறேன், உங்கள் பேச்சையும் நேசிக்கிறேன்” என்று உறுதிபடக் கூறினேன்.
அதற்கு அந்த வாலிபர், “நமக்கிடையே இரத்த உறவும் இல்லை, நான் உங்களுக்கு எவ்விதப் பொருளும் வழங்கவில்லை; ஏன் என்னை நேசிக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான், “அல்லாஹ்வின் மாண்பிற்காகவே நான் உங்களை நேசிக்கிறேன்” என்று பதிலளித்தேன். உடனே அந்த வாலிபர், என் ஆடையைப் பிடித்து இழுத்துத் தன்னை நெருக்கமாக அமர வைத்துவிட்டு, “நற்செய்தி பெறுங்கள்! ‘அல்லாஹ்வின் மாண்பிற்காக ஒருவரை ஒருவர் நேசிப்பவர்கள், அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத அந்த நாளில், அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலில் இருப்பார்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.
அவர் இந்த ஹதீஸைக் கூறி முடித்ததும் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே நான், “அல்லாஹ்வின் அடியாரே, நீங்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நான் முஆத் பின் ஜபல்” என்று பதிலளித்தார்.
அதன்பின், ஆயித் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் ஹதீஸ்களை அடிக்கடி அறிவிப்பவராக இருந்தார்.
(bazzar-2672: 2672)حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ نَصْرٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَهْرَامَ، قَالَ: أَخْبَرَنَا شَهْرُ بْنُ حَوْشَبٍ، قَالَ: أَخْبَرَنَا عَائِذُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ
أَنَّهُ دَخَلَ الْمَسْجِدَ يَوْمًا مَعَ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. . . كَانُوا أَوَّلَ إِمَارَةِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: فَجَلَسْتُ مَجْلِسًا فِيهِ بِضْعَةٌ وَعِشْرُونَ كُلُّهُمْ يَذْكُرُونَ حَدِيثَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي الْحَلْقَةِ فَتًى شَابٌّ شَدِيدُ الْأُدْمَةِ حُلْوُ الْمِنْطَقِ وَضِيءٌ، وَهُوَ أَشَبُّ الْقَوْمِ شَبَابًا فَإِذَا اشْتَبَهَ عَلَيْهِمْ مِنَ الْحَدِيثِ شَيْءٌ رَدُّوهُ إِلَيْهِ فَحَدَّثَهُمْ حَدِيثَهُمْ فَبَيْنَمَا عَائِذُ اللَّهِ جَالِسٌ مَعَهُمْ فِي حَلْقَتِهِمْ أُقِيمَتِ الصَّلَاةُ فَفَرَّقَتْ بَيْنَهُمْ فَأَقْسَمَ لِي مَا مَرَّتْ عَلَيْهِ لَيْلَةٌ مِنَ الدَّهْرِ لَا مَرَضٌ شَدِيدٌ سَقَّمَهُ، وَلَا حَاجَةٌ مُهِمَّةٌ أَطْوَلَ عَلَيْهِ مِنْ تِلْكِ اللَّيْلَةِ رَجَاءَ أَنْ يُصْبِحَ فَتَلَقَّاهُمْ قَالَ: قَالَ فَغَدَا إِلَى الْمَسْجِدِ فَأَقْبَلَ، وَأَدْبَرَ فَلَمْ يُصَادِفْ مِنْهُمْ أَحَدًا، ثُمَّ هَجَّرَ الرَّوَاحَ فَأَقْبَلَ وَأَدْبَرَ فَإِذَا هُوَ بِالْفَتَى الَّذِي كَانَ بِالْأَمْسِ يُشِيرُونَ إِلَيْهِ بِحَدِيثِهِمْ يُصَلِّي إِلَى أُسْطُوَانَةٍ فِي الْمَسْجِدِ فَقَامَ عَائِذُ اللَّهِ إِلَى الْأُسْطُوَانَةِ الَّتِي بَيْنَ يَدَيْهِ فَلَمَّا قَضَى صَلَاتَهُ أَسْنَدَ ظَهْرَهُ إِلَيْهَا فَجَعَلْتُ أَنْظُرُ إِلَيْهِ حَتَّى عَلِمَ أَنَّ لِيَ إِلَيْهِ حَاجَةً قَالَ: قُلْتُ قَدْ صَلَّيْتَ أَصْلَحَكَ اللَّهَ؟، فَقَالَ الْفَتَى: نَعَمْ، قُلْتُ: فَقُمْتُ فَجَلَسْتُ مُقَابِلَهُ مُحْتَبِيًا لَا هُوَ يُحَدِّثُنِي شَيْئًا وَلَا أَنَا أَبْدَأُهُ بِشَيْءٍ حَتَّى ظَنَنْتُ أَنَّ الصَّلَاةَ مُفَرِّقَةٌ بَيْنَنَا، قَالَ: قُلْتُ: أَصْلَحَكَ اللَّهُ حَدِّثْنِي فَوَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ وَأُحِبُّ حَدِيثَكَ قَالَ: آلِلَّهِ إِنَّكَ لَتُحِبُّنِي وَتُحِبُّ حَدِيثِي؟، قُلْتُ: وَاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ إِنِّي لَأُحِبُّكَ وَأُحِبُّ حَدِيثَكَ، فَقَالَ الْفَتَى: لِمَ تُحِبُّنِي وَتُحِبُّ حَدِيثِي وَاللَّهِ مَا بَيْنِي وَبَيْنَكَ قَرَابَةٌ وَلَا أَعْطَيْتُكَ مَالًا؟ قَالَ: قُلْتُ: أُحِبُّكَ مِنْ جَلَالِ اللَّهِ، قَالَ لَهُ: إِنَّكَ لَتُحِبُّنِي مِنْ جَلَالِ اللَّهِ؟، قُلْتُ لَهُ: وَاللَّهِ لَأُحِبُّكَ مِنْ جَلَالِ اللَّهِ، قَالَ: فَأَخَذَ بِحُبْوَتِي فَبَسَطَهَا إِلَيْهِ حَتَّى أَدْنَانِي مِنْهُ ثُمَّ قَالَ: أَبْشِرْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الَّذِينَ يَتَحَابُّونَ بِجِلَالِ اللَّهِ فِي ظِلِّ عَرْشِ اللَّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ» .
فَلَمَّا حَدَّثَنِي بِهَذَا الْحَدِيثِ أُقِيمَتِ الصَّلَاةُ قَالَ: قُلْتُ مَنْ أَنْتَ يَا عَبْدَ اللَّهِ؟، قَالَ: مُعَاذُ بْنُ جَبَلٍ، وَكَانَ عَائِذُ اللَّهِ يُكْثِرُ أَنْ يُحَدِّثَ حَدِيثَ مُعَاذِ بْنِ جَبَلٍ
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-2672.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்