ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
2325. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி “தல்பியா” சொன்னவர்களாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம்.
எங்களுடன் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் இறையில்லத்தைச் சுற்றி வந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (சயீ) ஓடினோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலால் ஆகி)க்கொள்ளட்டும்” என்றார்கள்.
நாங்கள், “எந்த வகையில் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “எல்லா வகையிலும் இஹ்ராமிலிருந்து விடுபடுங்கள்” என்றார்கள். ஆகவே, நாங்கள் மனைவியரிடம் சென்றோம் (தாம்பத்திய உறவு கொண்டோம்); (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்தோம்; நறுமணம் பூசிக்கொண்டோம்.
துல்ஹஜ் எட்டாவது நாள் (யவ்முத் தர்வியா) வந்தபோது, ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறினோம். (ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும்
خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُهِلِّينَ بِالْحَجِّ، مَعَنَا النِّسَاءُ وَالْوِلْدَانُ، فَلَمَّا قَدِمْنَا مَكَّةَ طُفْنَا بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالمَرْوَةِ، فَقَالَ لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ فَلْيَحْلِلْ» قَالَ قُلْنَا: أَيُّ الْحِلِّ؟ قَالَ: «الْحِلُّ كُلُّهُ» قَالَ: فَأَتَيْنَا النِّسَاءَ، وَلَبِسْنَا الثِّيَابَ، وَمَسِسْنَا الطِّيبَ، فَلَمَّا كَانَ يَوْمُ التَّرْوِيَةِ أَهْلَلْنَا بِالْحَجِّ، وَكَفَانَا الطَّوَافُ الْأَوَّلُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَأَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَشْتَرِكَ فِي الْإِبِلِ وَالْبَقَرِ، كُلُّ سَبْعَةٍ مِنَّا فِي بَدَنَةٍ
சமீப விமர்சனங்கள்