தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3839

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இவற்றில் (பரக்கத் எனும்) அபிவிருத்தி உண்டாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்தப் பழங்களை ஒன்று சேர்த்து, அதற்காக பரக்கத் உண்டாகும்படி துஆ செய்தார்கள். பிறகு என்னிடம், “இந்தப் பழங்களை உமது பையில் போட்டுக்கொள். அதில் இருந்து எதையாவது எடுக்க நினைக்கும்போது, பையினுள் உனது கையை விட்டு எடுத்துக்கொள். அவற்றை கீழே சிதறிவிடாதே” என்று கூறினார்கள்.

அந்தப் பழங்களில் இருந்து அல்லாஹ்வின் பாதையில் இத்தனை இத்தனை வஸக்குகள் என நான் எடுத்துச் சென்றேன். நாங்கள் அதில் இருந்து சாப்பிட்டோம். பிறருக்கும் உண்ணக் கொடுத்தோம். உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை நடந்த நாள் வரை அந்தப் பை என்னுடைய இடுப்பை விட்டு பிரியாமல் இருந்தது. அவர்கள் கொல்லப்பட்ட அந்த நாளில்தான் அது இல்லாமல் போனது.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் இந்த வகை அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் உள்ளதாகும். மேலும், அபூஹுரைரா (ரலி) வழியாக இந்த ஹதீஸ் வேறொரு வகை அறிவிப்பாளர்தொடரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(திர்மிதி: 3839)

حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى القَزَّازُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ: حَدَّثَنَا المُهَاجِرُ، عَنْ أَبِي العَالِيَةِ الرِّيَاحِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالبَرَكَةِ فَضَمَّهُنَّ ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالبَرَكَةِ. فَقَالَ لِي: ” خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ هَذَا، أَوْ فِي هَذَا المِزْوَدِ، كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ يَدَكَ فِيهِ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا، فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ، فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ، وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ عَنْ أَبِي هُرَيْرَةَ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3774.
Tirmidhi-Shamila-3839.
Tirmidhi-Alamiah-3774.
Tirmidhi-JawamiulKalim-3803.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . இம்ரான் பின் மூஸா-அல்கஸ்ஸாஸ்

3 . ஹம்மாத் பின் ஸைத்

4 . முஹாஜிர் பின் மக்லத்-அபூமக்லத், அபூகாலித்

5 . ருஃபைஃ பின் மிஹ்ரான்-அபுல்ஆலியா-அர்ரியாஹீ

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


ஆய்வின் சுருக்கம்:

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45556-முஹாஜிர் பின் மக்லத் என்பவர் பற்றி அதிகமானோர் பாராட்டியுள்ளனர். வேறுசிலர் இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளனர்.

விரிவாக பார்க்க: ராவிபெயர்-முஹாஜிர் பின் மக்லத்.


இவரைப் பற்றிய ஆய்வில் இவர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று சிலர் கருதுவதால் இவர் இடம்பெறும் செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.

மேற்கண்ட செய்தியை திர்மிதீ இமாம், அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்ற பலரும் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: ஸஹீஹா-2936, தஃலீக் ஷுஐப்-அஹ்_மத்-8628, திர்மிதி-4174 )


இதுபோன்ற கருத்தில் வரும் வேறு சில செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-24768, புகாரி-3097, முஸ்லிம்-4581, அஹ்மத்-10706,


திர்மிதி-3839 இல் உள்ள மேற்கண்ட செய்தி அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களின் வறுமை குறித்துவரும் வேறு சில செய்திகளுக்கு முரணாக இருப்பதாலும், இந்தக் கருத்தில் வரும் செய்திகளின் அறிவிப்பாளர்தொடரில் விமர்சிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்பதாலும் தமிழக அறிஞர்களில் ஒருவரான பி.ஜே அவர்கள் இதை பலவீனமானது என்று கூறியுள்ளார்.

பார்க்க: www.youtube.com/watch?v=If3VYt5GDNY.

பார்க்க: புகாரி-5076, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-14941, 21583,


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹாஜிர் —> அபுல்ஆலியா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-3, அஹ்மத்-8628, திர்மிதீ-3839, இப்னு ஹிப்பான்-6532, ஃபவாஇத் தம்மாம்-1765, மஃரிஃபதுஸ் ஸஹாபா-4761,


  • அபூபக்ரா வின் அடிமை —> அபுல்ஆலியா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: தலாஇலுன் நுபுவ்வஹ்-அபூநுஐம்-341,


  • ஸஹ்ல் —> அய்யூப் —> இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
    இறப்பு ஹிஜ்ரி 110
    வயது: 78
    —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: ஜுஸ்உ மின் ஹதீஸி அபீஅப்தில்லாஹ்-கத்தான்-99, பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
தலாஇலுன் நுபுவ்வஹ்-2363, அமாலீ இப்னு ஸம்ஊன்-, ஸியரு அஃலாமின் நுபலா-,


جزء من حديث أبي عبد الله القطان

(99)- [99 ] حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو، قَالَ: ثنا سَهْلُ بْنُ زِيَادٍ أَبُو زِيَادٍ، قثنا أَيُّوبُ السِّخْتِيَانِيُّ، عَنْ مُحَمَّدِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ فِي غَزَاةٍ، فَأَصَابَهُمْ عَوَزٌ مِنَ الطَّعَامِ، فَقَالَ: يَا أَبَا هُرَيْرَةَ عِنْدَكَ شَيْءٌ؟ قَالَ: قُلْتُ: شَيْءٌ مِنْ تَمْرٍ فِي مِزْوَدٍ. قَالَ: جِئْ بِهِ. قَالَ: فَجِئْتُ بِالْمِزْوَدِ، قَالَ: هَاتِ نِطْعًا. فَجِئْتُ ِبالنِّطْعِ، فَبَسَطَهُ، قَالَ: ثُمَّ قَالَ: بِسْمِ اللَّهِ. فَجَعَلَ يَضَعُ كُلَّ تَمْرَةٍ وَيُسَمِّي، حَتَّى أَتَى عَلَى التَّمْرِ، فَقَالَ بِهِ هَكَذَا، فَجَمَعَهُ، فَقَالَ: ادْعُوا بِلالا وَأَصْحَابَهُ. فَأَكَلُوا حَتَّى شَبِعُوا، وَخَرَجُوا، ثُمَّ قَالَ: ادْعُ فُلانًا وَأَصْحَابَهُ. فَأَكَلُوا وَشَبِعُوا، وَخَرَجُوا، ثُمَّ قَالَ: ادْعُ فُلانًا وَأَصْحَابَهُ. فَأَكَلُوا وَشَبِعُوا، وَخَرَجُوا، وَفَضَلَ تَمْرٌ، فَقَالَ لِي: اقْعُدْ. فَقَعَدْتُ، فَأَكَلَ، وَأَكَلْتُ، قَالَ: وَفَضَلَ تَمْرٌ، فَأَخَذَهُ، فَأَدْخَلَهُ فِي الْمِزْوَدِ، فَقَالَ: يَا أَبَا هُرَيْرَةَ إِذَا أَرَدْتَ شَيْئًا فَأَدْخِلْ يَدَكَ فَخُذْ وَلا تُكْفِئْ، فَيُكْفَأَ عَلَيْكَ. قَالَ: فَمَا كُنْتُ أُرِيدُ تَمْرًا إِلا وَأَدْخَلْتُ يَدِي فَأَخَذْتُ مِنْهُ خَمْسِينَ وَسْقًا فِي سَبِيلِ اللَّهِ وَكَانَ مُعَلَّقًا خَلْفَ رَحْلِي، فَوَقَعَ فِي زَمَانِ عُثْمَانَ بْنِ عَفَّانَ فَذَهَبَ


  • யஸீத் பின் அபூமன்ஸூர் —> அபூமன்ஸூர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஷ்ஷரீஆ-ஆஜுரீ-1060, ஃபவாஇத் தம்மாம்-1766, தலாஇலுன் நுபுவ்வஹ்-அபூநுஐம்-342, பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
தலாஇலுன் நுபுவ்வஹ்-2364,


  • ஸைத் அல்அம்மீ —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அக்பாரு அஸ்பஹான்-2278,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-5076, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-14941, 21583,

2 comments on Tirmidhi-3839

    1. வ அலைக்கும் ஸலாம். நீங்கள் லாகின் கொடுத்து சேவ் செய்யவும். இன்ஷா அல்லாஹ் வேலை செய்யும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.