“மூன்று விஷயங்களால்தான் நான் (மிகவும்) துன்பமடைந்தேன். ஒன்று, நான் நபி (ஸல்) அவர்களின் தோழராகவும், சிறிய பணியாளராகவும் இருந்தபோது, அவர்கள் மரணமடைந்தது. இரண்டாவது, உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டது. மூன்றாவது, மிஸ்வதை (தோல் பையை) இழந்தது” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், “தோல் பையின் கதை என்ன?” என்று கேட்டோம்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள், அப்போது தான் தோல் பை பற்றிய முழு ஹதீஸையும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)
(akhbar-asbahan-2278: 2278)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ يُوسُفَ، ثنا أَبُو طَالِبٍ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ دِعْبِلٍ الْخُزَاعِيُّ، ثنا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، ثنا عَبْدُ الرَّحِيمِ بْنُ زَيْدٍ الْعَمِّيُّ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
«مَا أُصِبْتُ إِلَّا بِثَلَاثَةٍ، بِمَوْتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُنْتُ صُوَيْحِبَهُ وَخُوَيْدِمَهُ، وَبِقَتْلِ عُثْمَانَ، وَالْمِزْوَدِ، فَقُلْنَا وَمَا قِصَّةُ الْمِزْوَدِ؟» فَذَكَرَ حَدِيثَ الْمِزْوَدِ بِطُولِهِ.
وَحَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ حَيَّانَ، أنا أَبُو طَالِبٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ دِعْبِلٍ، ثنا سُوَيْدٌ بِهِ
Akhbar-Asbahan-Tamil-.
Akhbar-Asbahan-TamilMisc-.
Akhbar-Asbahan-Shamila-.
Akhbar-Asbahan-Alamiah-.
Akhbar-Asbahan-JawamiulKalim-2278.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூநுஐம்
2 . முஹம்மத் பின் ஜஅஃபர் பின் யூஸுஃப்
3 . அபூதாலிப்-முஹம்மத் பின் ஹுஸைன் பின் திஃ_பில்-அல்குஸாயீ
4 . ஸுவைத் பின் ஸயீத்
5 . அப்துர்ரஹீம் பின் ஸைத்-அல்அம்மீ
6 . ஸைத் பின் ஹவாரீ அல்அம்மீ
7 . ஸயீத் பின் முஸய்யிப்
8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-38480-முஹம்மத் பின் ஜஅஃபர், ராவீ-20037-முஹம்மத் பின் ஹுஸைன் ஆகியோரின் நிலை அறியப்படவில்லை.
ராவீ-18891-ஸுவைத் பின் ஸயீத் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.
ராவீ-22574-அப்துர்ரஹீம் பின் ஸைத் அல்அம்மீ ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்; மேலும் அவரின் தந்தை ராவீ-16432-ஸைத் பின் ஹவாரீ அல்அம்மீ பற்றி சிலர் சுமாரானவர் என்று கூறியிருந்தாலும் அதிகமானோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/606, 1/352)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-3839.
சமீப விமர்சனங்கள்