தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3410

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரண்டு நற்செயல்களை வழமையாக கடைப்பிடித்து வரும் முஸ்லிமான மனிதர் கண்டிப்பாக சொர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்து வர) எளிமையானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே!

அவ்விரண்டில் முதல் நற்செயல் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும் கூறுவதாகும். இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

அவ்விரண்டில் இரண்டாவது  நற்செயல், நீ தூங்கும் முன் படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் என்று நூறு தடவை கூறுவதாகும். இவைகள் நாவில் நூறு தடவையாகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் 1000-ஆயிரம் நன்மைகளாகும். (ஆக மொத்த நன்மைகள் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்) என்று கூறிய  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யார் தான்  ஒரு நாளில் இரவிலும், பகலிலும் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு தீமைகளை செய்வார்? எனக் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் அதை நாங்கள் எவ்வாறு எண்ண முடியும்? என்று கூறினார்கள்.

பிறகு (இந்த நற்செயலை அதிகமானோர் கடைபிடிக்காமல் இருக்கும் காரணத்தை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழுகையில் இருக்கும் போது ஷைத்தான் அவரிடம் வந்து, “இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்” என்று சொல்லிக் கொண்டு இருப்பான். இறுதியில் அவர் (தொழுகை முடிந்து மேற்கண்ட தஸ்பீஹ்களை ஓதாமல்) சென்று விடுவார். மேலும் உங்களில் ஒருவர் படுக்கைக்கு செல்லும் போது அவரை  ஷைத்தான் தூங்கச் செய்துக்கொண்டே இருப்பான். இறுதியில் (அவர் மேற்கண்ட தஸ்பீஹ்களை ஓதாமல்) தூங்கிவிடுவார்.


மேலும் இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை) கையால் (விரல்களால்) எண்ணி செய்வதை பார்த்தேன் என்று கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். மேலும் இதை அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து ஷுஅபா (ரஹ்), ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) ஆகியோரும் அறிவித்துள்ளனர்.

அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அஃமஷ் (ரஹ்) அவர்கள் இதைச் சுருக்கமாக அறிவித்துள்ளார்.

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் ஸைத் பின் ஸாபித் (ரலி), அனஸ் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(திர்மிதி: 3410)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ قَالَ: حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

خَلَّتَانِ لَا يُحْصِيهِمَا رَجُلٌ مُسْلِمٌ إِلَّا دَخَلَ الجَنَّةَ، أَلَا وَهُمَا يَسِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ: يُسَبِّحُ اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرًا، وَيَحْمَدُهُ عَشْرًا، وَيُكَبِّرُهُ عَشْرًا “، قَالَ: فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُهَا بِيَدِهِ، قَالَ: «فَتِلْكَ خَمْسُونَ، وَمِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُ مِائَةٍ فِي المِيزَانِ، وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ تُسَبِّحُهُ وَتُكَبِّرُهُ وَتَحْمَدُهُ مِائَةً، فَتِلْكَ مِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ فِي المِيزَانِ، فَأَيُّكُمْ يَعْمَلُ فِي اليَوْمِ وَاللَّيْلَةِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ سَيِّئَةٍ»؟ قَالُوا: فَكَيْفَ لَا نُحْصِيهَا؟ قَالَ: ” يَأْتِي أَحَدَكُمُ الشَّيْطَانُ وَهُوَ فِي صَلَاتِهِ، فَيَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، حَتَّى يَنْفَتِلَ، فَلَعَلَّهُ أَلَّا يَفْعَلَ، وَيَأْتِيهِ وَهُوَ فِي مَضْجَعِهِ، فَلَا يَزَالُ يُنَوِّمُهُ حَتَّى يَنَامَ

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»، وَقَدْ رَوَى شُعْبَةُ، وَالثَّوْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، هَذَا الحَدِيثَ، وَرَوَى الأَعْمَشُ، هَذَا الحَدِيثَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ مُخْتَصَرًا وَفِي البَابِ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، وَأَنَسٍ، وَابْنِ عَبَّاسٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3410.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3357.




  • இந்தச் செய்தியை அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) அவர்களிடமிருந்து சுமார் 14 முக்கிய பலமான அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்களில் சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். இவர்கள் வழியாக அறிவிக்கும் வேறுசிலர் ஹதீஸின் கருத்தை சிதைத்தும் அறிவித்துள்ளனர்…

(சுருக்கமான செய்தியை பார்க்க: அபூதாவூத்-1502)


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் மனீஃ

3 . இஸ்மாயீல் பின் உலைய்யா

4 . அதாஉ பின் ஸாயிப்

5 . ஸாயிப் பின் மாலிக்

6 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) அவர்கள், கூஃபாவை சேர்ந்தவர். பஸராவிற்கு இரண்டாவது முறை சென்ற பின் இறுதி காலத்தில் நினைவாற்றல் மிக குறைந்தவர் என்றாலும் அஃமஷ் (ரஹ்) கூஃபாவை சேர்ந்தவர் என்பதால் , அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) நினைவாற்றல் குறைவதற்கு முன் செவியேற்றுள்ளார் என்பதால் இது சரியான செய்தி.
  • இவரின் எந்த வகையான அறிவிப்புகளை ஏற்க வேண்டும் எவைகளை ஏற்கக் கூடாது என்று விரிவான விளக்கங்கள் உள்ளன.
  • இவர் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
  • அதே போன்று இவர் மூளை குழம்புவதற்கு முன் இவரிடமிருந்து செவியேற்று அறிவிப்பவர்களின் செய்திகள் சில நிபந்தனையின் படி ஏற்கப்படும் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3189, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29264, அஹ்மத்-6498, 6910, அல்அதபுல் முஃப்ரத்-1216, இப்னு மாஜா-926, அபூதாவூத்-5065, திர்மிதீ-3410, முஸ்னத் பஸ்ஸார்-2403, 2404, 2405, 2479, குப்ரா நஸாயீ-1272, 10580, 10586, 10587, நஸாயீ-1348, இப்னு ஹிப்பான்-2012, 2018, அல்முஃஜமுல் அவ்ஸத்-2953, 5608, 6215, 7485, குப்ரா பைஹகீ-4919, 4920,


2, 3 . ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அமலுல் யவ்மி வல்லைலா-நஸா_யீ-135/153, 154,

عمل اليوم والليلة للنسائي (ص: 208)
135 – أَخْبرنِي زَكَرِيَّا بن يحيى قَالَ حَدثنَا الْحسن بن عَرَفَة قَالَ حَدثنَا الْمُبَارك بن سعيد عَن مُوسَى الْجُهَنِيّ عَن مُصعب بن سعد عَن سعد قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
مَا يمْنَع أحدكُم أَن يسبح دبر كل صَلَاة عشرا وَيكبر عشرا ويحمد عشرا فَذَلِك فِي خمس صلوَات خَمْسُونَ وَمِائَة بِاللِّسَانِ وَألف وَخَمْسمِائة فِي الْمِيزَان وَإِذا أَوَى إِلَى فرَاشه سبح ثَلَاثًا وَثَلَاثِينَ وَحمد ثَلَاثًا وَثَلَاثِينَ وَكبر أَرْبعا وَثَلَاثِينَ فَذَلِك مائَة بِاللِّسَانِ وَألف بالميزان فَأَيكُمْ يعْمل فِي يَوْم وَلَيْلَة أَلفَيْنِ وَخَمْسمِائة سَيِّئَة
خَالفه يعلى بن عبيد رَوَاهُ عَن مُوسَى الْجُهَنِيّ عَن مُوسَى عَن أبي زرْعَة عَن أبي هُرَيْرَة

عمل اليوم والليلة للنسائي (ص: 209)
154 – أخبرنَا أَحْمد بن سُلَيْمَان قَالَ حَدثنَا يعلى قَالَ حَدثنَا مُوسَى وَهُوَ الْجُهَنِيّ عَن مُوسَى عَن أبي زرْعَة عَن أبي هُرَيْرَة قَالَ
من قَالَ فِي دبر كل صَلَاة عشر تسبيحات وَعشر تَكْبِيرَات وَعشر تحميدات فِي خمس صلوَات فَتلك خَمْسُونَ وَمِائَة بِاللِّسَانِ وَألف وَخَمْسمِائة فِي الْمِيزَان وَإِذا أَخذ مضجعه مائَة بِاللِّسَانِ وَألف فِي الْمِيزَان فَأَيكُمْ يُصِيب فِي يَوْم (644 ح) أَلفَيْنِ وَخَمْسمِائة سَيِّئَة (14 ب)

ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) ஆகியோர் வழியாக வரும் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களும் தவறானவை.

மூஸா அல்ஜுஹனீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் சுமார் 16 பலமான அறிவிப்பாளர்கள் வேறு கருத்தை அறிவித்துள்ளனர். (பார்க்க: முஸ்லிம்-5230)


4 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்- 838, அஸல் ஹதீஸ்-புகாரி-3113, முஸ்னத் ஹுமைதீ-43, 44, …

مسند الحميدي (1/ 174)
44 – حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، ثنا سُفْيَانُ، ثنا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: ” أَنَّ فَاطِمَةَ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْأَلُهُ خَادِمًا فَقَالَ: «لَا أُعْطِيكِ خَادِمًا، وَأَدَعُ أَهْلَ الصُّفَّةِ تُطْوَى بُطُونُهُمْ مِنَ الْجُوعِ، أَلَا أُخْبِرُكِ بِمَا هُوَ خَيْرٌ لَكِ مِنْهُ» ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ الْأَوَّلِ إِلَى آخِرِهِ


5 . உம்மு மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 31760, அல்முஃஜமுல் கபீர்- 351, …


6 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-12207.


தஸ்பீஹ் மணி பற்றிய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3554.


  • கூடுதல் தகவல்-majles alukah .
  • அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) அறிவிப்புகள் பற்றி-almaktabaorg.

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1044,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.