بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
இமாம் அவர்கள் தொகுத்துள்ள அல்அர்பஈன் எனும் 42 முக்கிய ஹதீஸ்கள். இத்துடன் இப்னு ரஜப் அவர்கள் தனது ஜாமிஉல் உலூமி வல்ஹிகம் எனும் நூலில் இணைத்துள்ள 8 ஹதீஸ்கள் சேர்த்து 50 ஹதீஸ்களின் தொகுப்பு:
1 . ஹதீஸ்: புகாரி-1, முஸ்லிம்-3868.
“செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது.
ஒருவரின் ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை மணக்கும் நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார்.
எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன் என்று உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி அறிவித்ததை நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: அல்கமா பின் வக்காஸ் அல்லைஸீ (ரஹ்)
2 . ஹதீஸ்: முஸ்லிம்-1.
நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை;எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார்.
பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும்,தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்” செய்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்” என்றார்.
அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.
அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்” என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்” என்றார்.
அடுத்து அம்மனிதர்,இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர்,மறுமை (உலக அழிவு) நாளைப் பற்றி (அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது.)” என்று கூறினார்கள்.
அம்மனிதர்,மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஓர் அடிமைப் பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.
பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள்,உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
3 . ஹதீஸ்: புகாரி-8, முஸ்லிம்-21.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை:)
1 . அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும்,முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பது;
2 . தொழுகையைக் கடைப்பிடிப்பது;
3 . ஸகாத் வழங்குவது;
4 . இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது;
5 . ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
4 . ஹதீஸ்: முஸ்லிம்-5145, புகாரி-6594.
உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷயங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார்.
எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஓரிறை)வன் மீதாணையாக! உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துகொண்டே செல்வார். அவருக்கும் சொர்க்கத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார்.
(இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய)செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
5 . ஹதீஸ்: முஸ்லிம்-3540, 3541, புகாரி-2697.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
6 .
ஹதீஸ்: முஸ்லிம்-3259 .
7 .
ஹதீஸ்: முஸ்லிம்-95 .
8 .
ஹதீஸ்: புகாரி-25 .
9 .
ஹதீஸ்: முஸ்லிம்-4702 .
10 .
ஹதீஸ்: முஸ்லிம்-1844 .
11 .
ஹதீஸ்: திர்மிதீ-2518 .
12 . பலவீனமானது.
ஹதீஸ்: திர்மிதீ-2317 .
13 .
ஹதீஸ்: புகாரி-13 .
14 .
ஹதீஸ்: முஸ்லிம்-3463 .
15 .
ஹதீஸ்: புகாரி-6475 .
16 .
ஹதீஸ்: புகாரி-6116 .
17 .
ஹதீஸ்: முஸ்லிம்-3955 .
18 . ஆய்வில்
ஹதீஸ்: திர்மிதீ-1987 .
19 .
ஹதீஸ்: திர்மிதீ-2516 .
20 .
ஹதீஸ்: புகாரி-6120 .
21 .
ஹதீஸ்: முஸ்லிம்-62 .
22 .
ஹதீஸ்: முஸ்லிம்-18 .
23 .
ஹதீஸ்: முஸ்லிம்-381 .
24 .
ஹதீஸ்: முஸ்லிம்-5033 .
25 .
ஹதீஸ்: முஸ்லிம்-1832 .
26 .
ஹதீஸ்: புகாரி-2989 .
27 .
ஹதீஸ்: முஸ்லிம்-4992 .
28 .
ஹதீஸ்: அஹ்மத்-17142 .
29 . ஆய்வில்
ஹதீஸ்: திர்மிதீ-2616.
30 . ஆய்வில்
ஹதீஸ்: தாரகுத்னீ-4396 .
31 . ஆய்வில்
ஹதீஸ்: இப்னு மாஜா-4102 .
32 . ஆய்வில்
ஹதீஸ்: தாரகுத்னீ-3079 .
33 .
ஹதீஸ்: முஸ்லிம்-3524 .
34 .
ஹதீஸ்: முஸ்லிம்-78 .
35 .
ஹதீஸ்: முஸ்லிம்-5010 .
36 .
ஹதீஸ்: முஸ்லிம்-5231 .
37 .
ஹதீஸ்: புகாரி-6491 .
38 .
ஹதீஸ்: புகாரி-6502 .
39 . ஆய்வில்
ஹதீஸ்: இப்னு மாஜா-2045 .
40 .
ஹதீஸ்: அஹ்மத்-6156 .
41 . பலவீனமானது.
ஹதீஸ்: தாரீகு பஃக்தாத்-1609.
42 .
ஹதீஸ்: திர்மிதீ-3540 .
43 .
ஹதீஸ்: புகாரி-6732 .
44 .
ஹதீஸ்: புகாரி-2646 .
45 .
ஹதீஸ்: புகாரி-2236 .
46 .
ஹதீஸ்: புகாரி-4342 .
47 .
ஹதீஸ்: அஹ்மத்-17186 .
48 .
ஹதீஸ்: புகாரி-34 .
49 .
ஹதீஸ்: திர்மிதீ-2344 .
50 .
ஹதீஸ்: அஹ்மத்-17680 .
சமீப விமர்சனங்கள்