Month: September 2019

Bukhari-3390

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3390. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன் தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம்(அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக்(அலை) அவர்களின் புதல்வரான யஅகூஃப்(அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப்(அலை) அவர்களேயாவார். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :60


«الكَرِيمُ، ابْنُ الكَرِيمِ، ابْنِ الكَرِيمِ، ابْنِ الكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ عَلَيْهِمُ السَّلاَمُ»


Bukhari-3389

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3389. உர்வா(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘(நிராகரிக்கும்) மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறை உதவி வருமென்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட)க் கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது’ என்று அல்லாஹ் கூறினான். (திருக்குர்ஆன் 12:110)

இவ்வசனத்தில் மூலத்தில் (‘பொய்யுரைக்கப்பட்டது’ என்பதைக் குறிப்பதற்குரிய சொல்லை) ‘குத்திபூ’ – தாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் (என இறைத் தூதர்கள் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது ‘குதிபூ’ – மக்கள் தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது (எனக் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? என்று கேட்டேன்.

‘ ‘குத்திபூ’ (தாம் பொய்யிக்கப்பட்டு விட்டோமோ என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள் என்றே ஓத வேண்டும்)’ என்று ஆயிஷா(ரலி) பதிலளித்தார்கள்.
உடனே, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களின் சமுதாயத்தினர் தங்களைப் பொய்ப்பிக்கிறார்கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள்? (ஆனால் ‘ழன்னூ’ – நபிமார்கள் சந்தேகித்தார்கள் என்று தானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ளது.

أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرَأَيْتِ قَوْلَهُ: (حَتَّى إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِّبُوا) أَوْ كُذِبُوا؟ قَالَتْ: «بَلْ كَذَّبَهُمْ قَوْمُهُمْ» ، فَقُلْتُ: وَاللَّهِ لَقَدِ اسْتَيْقَنُوا أَنَّ قَوْمَهُمْ كَذَّبُوهُمْ، وَمَا هُوَ بِالظَّنِّ، فَقَالَتْ: «يَا عُرَيَّةُ لَقَدِ اسْتَيْقَنُوا بِذَلِكَ»، قُلْتُ: فَلَعَلَّهَا أَوْ كُذِبُوا، قَالَتْ: ” مَعَاذَ اللَّهِ، لَمْ تَكُنِ الرُّسُلُ تَظُنُّ ذَلِكَ بِرَبِّهَا، وَأَمَّا هَذِهِ الآيَةُ، قَالَتْ: هُمْ أَتْبَاعُ الرُّسُلِ، الَّذِينَ آمَنُوا بِرَبِّهِمْ وَصَدَّقُوهُمْ، وَطَالَ عَلَيْهِمُ البَلاَءُ، وَاسْتَأْخَرَ عَنْهُمُ النَّصْرُ، حَتَّى إِذَا اسْتَيْأَسَتْ مِمَّنْ كَذَّبَهُمْ مِنْ قَوْمِهِمْ، وَظَنُّوا أَنَّ أَتْبَاعَهُمْ كَذَّبُوهُمْ، جَاءَهُمْ نَصْرُ اللَّهِ ” قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” {اسْتَيْأَسُوا} [يوسف: 80] اسْتَفْعَلُوا، مِنْ يَئِسْتُ مِنْهُ مِنْ يُوسُفَ، {لاَ تَيْأَسُوا مِنْ رَوْحِ اللَّهِ} [يوسف: 87] مَعْنَاهُ الرَّجَاءُ


Bukhari-3388

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3388. மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்

ஆயிஷா(ரலி) அவர்களைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது (நடந்தவை பற்றி அவர்களின் தாயாரான) உம்மு ரூமான்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.

நான் ஆயிஷாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்களிடம், ‘இன்னாரை (மிஸ்தஹ் இப்னு உஸாஸா – ரலி – அவர்களை) அல்லாஹ் நிந்திக்கட்டும்’ என்று கூறியபடி வந்தாள். நான், ‘ஏன் (இப்படிச் சொல்கிறாய்?’) என்று கேட்டேன். அதற்கு அவள், ‘(அவதூறுச்) செய்தியை அவர் (அறியாமையால் பரப்பி வருகிறார்’ என்று பதிலளித்தாள். ஆயிஷா(ரலி), ‘எந்த (அவதூறுச்) செய்தியை?’ என்று கேட்டார். அவள் அந்த அவதூறுச் செய்தியைத் தெரிவித்தாள். ஆயிஷா(ரலி), ‘இதை (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களும் (என் கணவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களும் செவியுற்றார்களா?’ என்று கேட்டார். நான், ‘ஆம் (செவியுற்றார்கள்)’ என்று பதில் சொன்னேன்.

உடனே, ஆயிஷா(ரலி) மூர்ச்சையடைந்து விழுந்து விட்டார்கள். பிறகு குளிர் காய்ச்சலுடன் தான், மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் வந்து, ‘இவளுக்கென்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். நான், ‘தன்னைப் பற்றி பேசப்பட்ட அவதூறுச் செய்தியைக் கேள்விப்பட்ட காரணத்தால் காய்ச்சல் அவரைப் பீடித்துவிட்டது’

سَأَلْتُ أُمَّ رُومَانَ، وَهِيَ أُمُّ عَائِشَةَ، عَمَّا قِيلَ فِيهَا مَا قِيلَ، قَالَتْ: بَيْنَمَا أَنَا مَعَ عَائِشَةَ جَالِسَتَانِ، إِذْ وَلَجَتْ عَلَيْنَا امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ، وَهِيَ تَقُولُ: فَعَلَ اللَّهُ بِفُلاَنٍ وَفَعَلَ، قَالَتْ: فَقُلْتُ: لِمَ؟ قَالَتْ: إِنَّهُ نَمَى ذِكْرَ الحَدِيثِ، فَقَالَتْ عَائِشَةُ: أَيُّ حَدِيثٍ؟ فَأَخْبَرَتْهَا. قَالَتْ: فَسَمِعَهُ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: نَعَمْ، فَخَرَّتْ مَغْشِيًّا عَلَيْهَا، فَمَا أَفَاقَتْ إِلَّا وَعَلَيْهَا حُمَّى بِنَافِضٍ،

فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا لِهَذِهِ» قُلْتُ: حُمَّى أَخَذَتْهَا مِنْ أَجْلِ حَدِيثٍ تُحُدِّثَ بِهِ، فَقَعَدَتْ فَقَالَتْ: وَاللَّهِ لَئِنْ حَلَفْتُ لاَ تُصَدِّقُونِي، وَلَئِنِ اعْتَذَرْتُ لاَ تَعْذِرُونِي، فَمَثَلِي وَمَثَلُكُمْ كَمَثَلِ يَعْقُوبَ وَبَنِيهِ، فَاللَّهُ المُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ، فَانْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْزَلَ اللَّهُ مَا أَنْزَلَ، فَأَخْبَرَهَا، فَقَالَتْ: بِحَمْدِ اللَّهِ لاَ بِحَمْدِ أَحَدٍ


Bukhari-3387

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3387. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், லூத்(அலை) அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் பலம் வாய்ந்த ஓர் உதவியாளனிடம் தஞ்சம் புகுந்தவர்களாக இருந்தார்கள். யூசுஃப்(அலை) அவர்கள் (அடைபட்டுக்) கிடந்த காலம் நான் சிறையில் (அடைபட்டுக்) கிடக்க நேர்ந்து, பிறகு (அவரிடம் வந்ததைப் போல்) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக் கொண்டிருப்பேன்.

(ஆனால், அவர் அவ்வளவு நெடுங்காலம் சிறையில் அடைபட்டுக் கிடந்தும், ‘தம் குற்றமற்ற தன்மையை ஏற்று அறிவிக்காதவரை சிறையிலிருந்து வெளியேற மாட்டேன்’ என்று அவர் கூறிவிட்டார்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60


«يَرْحَمُ اللَّهُ لُوطًا لَقَدْ كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ، وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ مَا لَبِثَ يُوسُفُ، ثُمَّ أَتَانِي الدَّاعِي لَأَجَبْتُهُ»


Bukhari-3386

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3386. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்று. இறைவா! ஸலமாபின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் இப்னு வலீதைப் காப்பாற்று. இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்று.

இறைவா! ‘முளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை (இறுக்கிக்) கடுமைப்படுத்துவாயாக! இறைவா! யூசுஃப் அவர்களின் சமுதாயத்தாருக்குக் கொடுத்த (கடும் பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போன்று முளருக்கும் (கடும் வறட்சி நிறைந்த) சில ஆண்டுகளைக் கொடு’ என்று அக்குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60


«اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ»


Bukhari-3385

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3385. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அப்போது, ‘அபூ பக்ரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி), ‘அபூ பக்ர்(ரலி) இத்தகைய (இளகிய மனமுடைய)வராயிற்றே!’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் முன்பு போன்றே (மீண்டும்) சொல்ல, ஆயிஷாவும் அதையே கூறினார்கள்.

பின்னர், நபி(ஸல்) அவர்கள் ‘அபூ பக்ருக்குச் சொல்லுங்கள். அவர் மக்களுக்குத் தெரிவிக்கட்டும். (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)வர்கள்’ என்று கூறினார்கள்.எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளிலேயே அபூ பக்ர்(ரலி) (மக்களுக்குத்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பாளர் ஹுஸைன்(ரஹ்) கூறினார்கள்:

ஸாயிதா(ரஹ்) அவர்களிடமிருந்து, (‘அபூ பக்ர்(ரலி) இத்தகைய மனிராயிற்றே’ என்னும் ஆயிஷா(ரலி) அவர்களின் சொல்லுக்குப் பதிலாக,) ‘இளகிய மனமுடைய மனிதராயிற்றே’ என்று சொன்னதாக அறிவித்தார்கள்.
Book :60


مَرِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ»، فَقَالَتْ عَائِشَةُ: إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ كَذَا، فَقَالَ مِثْلَهُ، فَقَالَتْ مِثْلَهُ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَإِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ» فَأَمَّ أَبُو بَكْرٍ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-3384

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3384. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (தம் மரணப் படுக்கையில் இருந்தபோது) என்னிடம், ‘அபூ பக்ர், அவர்களை மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி சொல்’ என்று கூறினார்கள். நான், ‘அவர்கள் (அதிகமாக துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள். நீங்கள் தொழுகைக்காக நிற்குமிடத்தில் அவர்கள் நிற்க நேரும்போது மனம் நெகிழ்ந்து போய் (அழுது) விடுவார்கள்’ என்று சொன்னேன்.

அவர்கள் முன்பு சொன்னது போன்றே மீண்டும் கூறினார்கள். நானும் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னேன்.

அறிவிப்பாளர் ஷுஉபா(ரஹ்) கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் மூன்றாவது முறையில்… அல்லது நான்காவது முறையில்… ‘(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகிற)வர்கள், அபூ பக்கருக்கு சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்.
Book :60


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهَا: «مُرِي أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ»، قَالَتْ: إِنَّهُ رَجُلٌ أَسِيفٌ، مَتَى يَقُمْ مَقَامَكَ رَقَّ. فَعَادَ فَعَادَتْ. قَالَ شُعْبَةُ فَقَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ «إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ مُرُوا أَبَا بَكْرٍ»


Bukhari-3383

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19

அல்லாஹ் கூறுகிறான்:

யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களின் வரலாறு பற்றிக் கேட்பவர்களுக்கு அதில் பெரும் சான்றுகள் இருக்கின்றன. (12:7) 57

3383. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘மனிதர்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘மனிதர்களில் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர் தாம்’ என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘இதைப் பற்றி உங்களிடம் நாங்கள் கேட்கவில்லை’ என்று கூறினர்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் மக்களிலேயே மிகவும் கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் (யஅகூப்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்’ என்று கூறினார்கள்.

மக்கள், ‘நாங்கள் இதைப் பற்றியும் உங்களிடம் கேட்கவில்லை’ என்று கூறினர். உடனே, நபி(ஸல்) அவர்கள், அப்படியென்றால், அரபுகளின் (பரம்பரைகளான) சுரங்கங்களைப் பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா? மக்கள் சுரங்கங்கள் ஆவர்.

அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும் போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்’

سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَكْرَمُ النَّاسِ؟ قَالَ: «أَتْقَاهُمْ لِلَّهِ» قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَأَكْرَمُ النَّاسِ يُوسُفُ نَبِيُّ اللَّهِ، ابْنُ نَبِيِّ اللَّهِ، ابْنِ نَبِيِّ اللَّهِ، ابْنِ خَلِيلِ اللَّهِ» قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَعَنْ مَعَادِنِ العَرَبِ تَسْأَلُونِي؟ النَّاسُ مَعَادِنُ، خِيَارُهُمْ فِي الجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الإِسْلاَمِ، إِذَا فَقُهُوا»، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا


Bukhari-3382

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18

அல்லாஹ் கூறுகிறான்:

(யூதர்களே!) யஅகூபை இறப்பு நெருங்கிய போது, நீங்கள் அங்கிருந்தீர்களா? அப்போது அவர் தம் மைந்தர்களிடம், எனக்குப் பின்னர் நீங்கள் எதை வணங்குவீர்கள்? என வினவினார்.

(அதற்கு) அவர்கள் உங்கள் இறைவனும் உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே நாங்கள் வணங்குவோம். மேலும் அவனுக்கே அடிபணிவோம்என்று கூறினார்கள். (2:133) 56

3382. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன் தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம்(அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக்(அலை) அவர்களின் புதல்வரான யஅகூப்(அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப்(அலை) அவர்களேயாவார். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 60


الْكَرِيمُ ابْنُ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ عَلَيْهِمُ السَّلَامُ


Bukhari-3381

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3381. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமக்குத்தாமே அநீதியிழைத்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்ததைப் போன்ற தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்றஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :60


«لاَ تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا أَنْفُسَهُمْ، إِلَّا أَنْ تَكُونُوا بَاكِينَ، أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَهُمْ»


Next Page » « Previous Page