Month: September 2023

Muwatta-Malik-2667

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2667. நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, விருத்தசேதனம் செய்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்மக்புரீ (ரஹ்)


خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: تَقْلِيمُ الأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ، وَنَتْفُ الإِبْطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَالاخْتِتَانُ.


Kubra-Nasaayi-11803

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11803. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உடலின் ஒரு பகுதியை (தோளை)ப் பிடித்துக்கொண்டு, “அல்லாஹ்வை நீ பார்ப்பது போன்று வணங்கு! உலகத்தில் நீ அந்நியனைப் போன்று அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


أَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعْضِ جَسَدِي، فَقَالَ: «اعْبُدِ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، وَكُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ، أَوْ عَابِرُ سَبِيلٍ»


Musnad-Ahmad-6156

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6156. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உடலின் ஒரு பகுதியை (தோளை)ப் பிடித்துக்கொண்டு, “அல்லாஹ்வை நீ பார்ப்பது போன்று வணங்கு! உலகத்தில் நீ அந்நியனைப் போன்று அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعْضِ جَسَدِي فَقَالَ: «اعْبُدِ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، وَكُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ، أَوْ عَابِرُ سَبِيلٍ»


Ibn-Majah-4114

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4114. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உடலின் ஒரு பகுதியை (தோளை)ப் பிடித்துக்கொண்டு, “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு;

உன்னை மண்ணறைவாசிகளில் ஒருவனாகக் கருதிக்கொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِبَعْضِ جَسَدِي، فَقَالَ: «يَا عَبْدَ اللَّهِ كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ، أَوْ كَأَنَّكَ عَابِرُ سَبِيلٍ، وَعُدَّ نَفْسَكَ مِنْ أَهْلِ الْقُبُورِ»


Tirmidhi-2333

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 22

எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது தொடர்பாக வந்துள்ளவை.

2333. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உடலின் ஒரு பகுதியை (தோளை)ப் பிடித்துக்கொண்டு, “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு;

உன்னை மண்ணறைவாசிகளில் ஒருவனாகக் கருதிக்கொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இந்த ஹதீஸின் இரண்டாவது அறிவிப்பாளரான) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீ காலை நேரத்தை அடைந்தால், மாலை நேரத்தை அடைவாய் என எண்ணாதே! நீ மாலை நேரத்தை அடைந்தால், காலை நேரத்தை அடைவாய் என எண்ணாதே! நீ நோய்வாய்ப்படுவதற்குமுன் உன் உடல்நலத்தில் சிறிதளவையேனும் (நன்மைக்குப்) பயன்படுத்திக் கொள். உன் இறப்புக்கு முன் ஜீவியத்தில் சிறிதளைவையேனும் (நன்மைக்காக) எடுத்துக்கொள்! ஏனெனில், அல்லாஹ்வின் அடியானே! நாளைக்கு உனது பெயர் என்ன (இறந்தவனா, இருப்பவனா) என்பதை நீ அறிய மாட்டாய்” என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி இப்னு உமர் (ரலி) அவர்களின் வழியாக மேலும் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعْضِ جَسَدِي فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ وَعُدَّ نَفْسَكَ فِي أَهْلِ القُبُورِ»

فَقَالَ لِي ابْنُ عُمَرَ: «إِذَا أَصْبَحْتَ فَلَا تُحَدِّثْ نَفْسَكَ بِالمَسَاءِ، وَإِذَا أَمْسَيْتَ فَلَا تُحَدِّثْ نَفْسَكَ بِالصَّبَاحِ، وَخُذْ مِنْ صِحَّتِكَ قَبْلَ سَقَمِكَ وَمِنْ حَيَاتِكَ قَبْلَ مَوْتِكَ فَإِنَّكَ لَا تَدْرِي يَا عَبْدَ اللَّهِ مَا اسْمُكَ غَدًا»


« Previous Page