தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-151

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

ஒருவர் துப்புரவு செய்திட மற்றவர் தண்ணீர் எடுத்துச் செல்லுதல்.

ஏன் (உங்கள் கூஃபா நகரில்) நபி (ஸல்) அவர்களின் காலணிகள், அவர்கள் சுத்தம் செய்வதற்குரிய தண்ணீர், மற்றும் தலையணையை சுமந்து (சேவகம் புரிந்து) கொண்டிருந்தவர் (இப்னுமஸ்ஊத் (ரலி) உங்களிடையே இல்லையா? என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டார்கள். 

 ‘நபி (ஸல்) அவர்கள் தங்களின் தேவைக்காக வெளியே சென்றால், நானும் சிறுவன் ஒருவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் கொண்டு செல்வோம். அந்தத் தண்ணீரின் மூலம் நபி (ஸல்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்’ என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
Book : 4

(புகாரி: 151)

بَابُ مَنْ حُمِلَ مَعَهُ المَاءُ لِطُهُورِهِ

وَقَالَ أَبُو الدَّرْدَاءِ: «أَلَيْسَ فِيكُمْ صَاحِبُ النَّعْلَيْنِ وَالطَّهُورِ وَالوِسَادِ؟»

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مُعَاذٍ هُوَ عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، يَقُولُ

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا خَرَجَ لِحَاجَتِهِ، تَبِعْتُهُ أَنَا وَغُلاَمٌ مِنَّا، مَعَنَا إِدَاوَةٌ مِنْ مَاءٍ»





மேலும் பார்க்க : புகாரி-150 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.