தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2662

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 ஒரு மனிதர் மற்றொரு மனிதரை நல்லவர் என்று கூறினால் (அவரது சாட்சியத்தை ஏற்க) அதுவே போதுமானதாகும்.

அபூஜமீலா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் கேட்பாரற்ற குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தேன். என்னை உமர் (ரலி) அவர்கள் பார்த்த போது, (அது கண்டெடுக்கப்பட்ட குழந்தை என்பதை நம்பாமல், நான் என் குழந்தையைத் தான் அதன் தகப்பன் என்கிற பொறுப்பை ஏற்க மறுத்துப் பொது நிதியிலிருந்து பணம் பெறுவதற்காக இப்படிக் கூறுகிறேன் என்று கருதி), இது உனக்கு ஆபத்தாகவே முடியும் என்று குற்றம் சாட்டுவதைப் போல் கூறினார்கள்.

எங்கள் (வட்டார அரசு) அதிகாரி ஒருவர், அவர் நல்ல மனிதர் என்று கூறியதும், அப்படித் தான் (என்று ஒப்புக் கொள்கிறேன்), போ! அக்குழந்தையின் பராமரிப்புச் செலவு எம் (அரசின்) மீது சாரும் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

 அபூ பக்ர்(ரலி) கூறினார்.

ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி(ஸல்) அவர்கள், ‘அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்’ என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, ‘தன் சகோதரனைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உங்களில் இருப்பவர், ‘இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக் கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்’ என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்’ என்றார்கள்.
Book : 52

(புகாரி: 2662)

بَابٌ: إِذَا زَكَّى رَجُلٌ رَجُلًا كَفَاهُ

وَقَالَ أَبُو جَمِيلَةَ، وَجَدْتُ مَنْبُوذًا فَلَمَّا رَآنِي عُمَرُ، قَالَ: «عَسَى الغُوَيْرُ أَبْؤُسًا» كَأَنَّهُ يَتَّهِمُنِي، قَالَ عَرِيفِي: إِنَّهُ رَجُلٌ صَالِحٌ، قَالَ: «كَذَاكَ اذْهَبْ وَعَلَيْنَا نَفَقَتُهُ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ

أَثْنَى رَجُلٌ عَلَى رَجُلٍ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ: «وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ، قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ» مِرَارًا، ثُمَّ قَالَ: «مَنْ كَانَ مِنْكُمْ مَادِحًا أَخَاهُ لاَ مَحَالَةَ، فَلْيَقُلْ أَحْسِبُ فُلاَنًا، وَاللَّهُ حَسِيبُهُ، وَلاَ أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا أَحْسِبُهُ كَذَا وَكَذَا، إِنْ كَانَ يَعْلَمُ ذَلِكَ مِنْهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.