தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6825

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29

(தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பவரிடம் உனக்குத் திருமணமாகிவிட்டதா? என்று (ஆட்சித்) தலைவர் கேட்பது.

 அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒருவர் வந்து அவர்களை அழைத்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்’ என்று தம்மைக் குறித்தே கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்டுக்கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். உடனே அவர்  நபி (ஸல்) அவர்கள் தங்களின் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்த பகுதிக்கு வந்து ‘இறைத்தூதர் அவர்களே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்’ என்றார். (மீண்டும்) அவரைவிட்டு நபி (ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அவர் (திரும்பவும்) நபி (ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்ட பக்கம் வந்தார். (இவ்வாறு) அவர் (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) தமக்கெதிராகத் தாமே நான்கு முறை சாட்சியம் அளித்தபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, ‘உமக்குப் பைத்தியமா?’ என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை, இறைத்தூதர் அவர்களே!’ என்றார். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், ‘உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘இவரைக் கொண்டுசென்று, இவருக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்’ என்று கூறினார்கள்.40

Book : 86

(புகாரி: 6825)

بَابُ سُؤَالِ الإِمَامِ المُقِرَّ: هَلْ أَحْصَنْتَ

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ المُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ: أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ:

أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مِنَ النَّاسِ وَهُوَ فِي المَسْجِدِ، فَنَادَاهُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي زَنَيْتُ، يُرِيدُ نَفْسَهُ، فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَنَحَّى لِشِقِّ وَجْهِهِ الَّذِي أَعْرَضَ قِبَلَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي زَنَيْتُ، فَأَعْرَضَ عَنْهُ، فَجَاءَ لِشِقِّ وَجْهِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي أَعْرَضَ عَنْهُ، فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، دَعَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَبِكَ جُنُونٌ» قَالَ: لاَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «أَحْصَنْتَ» قَالَ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.