தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-42

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

  …

அறிவிப்பவர் : இர்பாள் பின் ஸாரியா (ரலி)

(இப்னுமாஜா: 42)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ بَشِيرِ بْنِ ذَكْوَانَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ يَعْنِي ابْنَ زَبْرٍ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي الْمُطَاعِ، قَالَ: سَمِعْتُ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ، يَقُولُ:

قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ، فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً، وَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ، وَذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ، فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ: وَعَظْتَنَا مَوْعِظَةَ مُوَدِّعٍ، فَاعْهَدْ إِلَيْنَا بِعَهْدٍ، فَقَالَ: «عَلَيْكُمْ بِتَقْوَى اللَّهِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَإِنْ عَبْدًا حَبَشِيًّا، وَسَتَرَوْنَ مِنْ بَعْدِي اخْتِلَافًا شَدِيدًا، فَعَلَيْكُمْ بِسُنَّتِي، وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَإِيَّاكُمْ وَالْأُمُورَ الْمُحْدَثَاتِ، فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-42.
Ibn-Majah-Shamila-42.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-42.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47994-யஹ்யா பின் அபுல்முதாஃ அவர்கள், இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களைக் கேட்கவில்லை என்றும், இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்கள் யஹ்யா பின் அபுல்முதாஃ பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார் என்றும் துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    கூறியுள்ளார். அபூஸுர்ஆ அவர்களும் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.

இந்தச் செய்தியில் யஹ்யா பின் அபுல்முதாஃ அவர்கள் இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக (ஸமிஃது என்ற) வார்த்தை அமைப்பு இருப்பதால் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவர் இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களின் மாணவர்களில் ஒருவராக கூறியுள்ளார்.

(நூல்கள்: தாரீகுல் கபீர்-3111, 8/306,  மீஸானுல் இஃதிதால்-9635, 4/410, தஹ்தீபுத் தஹ்தீப்-4/389)

யஹ்யா பின் அபுல்முதாஃ, இர்பாள் பின் ஸாரியா (ரலி) ஆகியோர் ஷாம்வாசிகள் ஆவர். துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
அபூஸுர்ஆ ஆகியோரும் ஷாம்வாசிகள் ஆவர். எனவே இவர்கள் தான் அவர்களைப் பற்றி நன்குஅறிந்தவர்கள் என்பதால் இவர்களின் கருத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இந்தக் கருத்தையே தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் கூறியுள்ளார். ஷாம்வாசிகளில் சிலர் முர்ஸலாக அறிவிப்பவர்களாக இருந்துள்ளனர் என்பதால் இவர்களின் விசயத்தில் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் தகவல் தவறாகிவிடுகிறது.

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-17142 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.