தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-386

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தபோது, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை உங்களுக்கு அறிவிக்கப்போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் மட்டும் இல்லையானால் இதை நான் உங்களுக்கு அறிவிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் அழகிய முறையில் அங்கத்தூய்மை செய்து, பின்னர் தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படாமலிருப்பதில்லை.

இதன் அறிவிப்பாளரான உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நாம் தெளிவான வசனங்களையும் நேர்வழியையும் அருளியதுடன் அவற்றை மக்களுக்கு வேதத்தில் விளக்கிய பின்னரும் அவற்றை யார் மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான். இன்னும் சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றார்கள் எனும் (2:159 ஆவது) வசனமே (உஸ்மான் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட) அந்த வசனமாகும்.

Book : 2

(முஸ்லிம்: 386)

وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، قَالَ: ابْنُ شِهَابٍ، وَلَكِنْ عُرْوَةُ، يُحَدِّثُ عَنْ حُمْرَانَ أَنَّهُ قَالَ

فَلَمَّا تَوَضَّأَ عُثْمَانُ قَالَ: وَاللهِ لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا وَاللهِ لَوْلَا آيَةٌ فِي كِتَابِ اللهِ مَا حَدَّثْتُكُمُوهُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَتَوَضَّأُ رَجُلٌ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ يُصَلِّي الصَّلَاةَ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلَاةِ الَّتِي تَلِيهَا» قَالَ عُرْوَةُ الْآيَةُ: {إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى} [البقرة: 159]- إِلَى قَوْلِهِ – {اللَّاعِنُونَ} [البقرة: 159]


Tamil-386
Shamila-227
JawamiulKalim-339




மேலும் பார்க்க : புகாரி-159 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.