தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6626

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நோன்பும் குர்ஆனும் கியாம நாளில் அடியானுக்குப் பரிந்துரை செய்யும். ”இறைவா, இந்த அடியானை நான் பகலில் உணவை விட்டும் ஆசைகளை விட்டும் தடுத்து விட்டேன். இவர் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்” என்று நோன்பு கோரும். “இரவில் அவனுடைய தூக்கத்தைத் தடுத்து விட்டேன். ஆகவே இவர் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்” என்று குர்ஆன் கோரும். அவை இரண்டின் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படும்.

(முஸ்னது அஹமது: 6626)

حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ حُيَيِّ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ، مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ، فَشَفِّعْنِي فِيهِ، وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ، فَشَفِّعْنِي فِيهِ “، قَالَ: «فَيُشَفَّعَانِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-6337.
Musnad-Ahmad-Shamila-6626.
Musnad-Ahmad-Alamiah-6337.
Musnad-Ahmad-JawamiulKalim-6447.




இதில் வரும் ஹுயை பின் அப்துல்லாஹ் பலவீனமானவர் என புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அஹ்மத்  போன்றோர் விமர்சித்துள்ளனர்..

நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 1 பக்: 623

இதில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ என்பவரும் பலவீனமானவர்,

நூல்: அல்காஷிஃப், அறிவிப்பாளர் எண் 2934.

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1470 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.