தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

thibbun nabavi-467

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 136

கீழ்வாதம் (என்னும் நோய்).

நபி (ஸல்) அவர்களுக்கு அத்திப்பழ குலை ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.  அப்போது நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம், “அத்திப்பழம் சாப்பிடுங்கள். சுவர்க்கத்தில் இருந்து இறக்கப்பட்ட பழங்களில் கொட்டை இருக்காது என்று இருந்தால் அது அத்திப்பழம் தான் என்று நான் கூறுவேன்.  மேலும் அது மூல நோயையும், கீழ்வாத நோயையும் நீக்குகிறது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

(thibbun nabavi-467: 467)

[136] باب في النقرس

حَدَّثَنا محمد بن عبد الرحمن بن الفضل، حَدَّثَنا أبو بكر محمد بن جعفر بن محمد بن سعيد، حَدَّثَنا الهيثم بن خالد القرشي، حَدَّثَنا حماد بن محمد البغدادي، حَدَّثَنا الأوزاعي، عَن يحيى بن أبي كثير، عَن أَبِي سلمة، عَن أَبِي ذر قال:

أهدى إلى النبي صَلَّى الله عَليْهِ وَسلَّم طبق من تين فقال لأصحابه: كلوا التين فلو قلت إن فاكهة نزلت من الجنة بلا عجم لقلت هي التين وقال النبي صَلَّى الله عَليْهِ وَسلَّم: إنه يذهب بالبواسير وينفع من النقرس.


Thibbun-Nabawi-Abu-Nuaym-Tamil-.
Thibbun-Nabawi-Abu-Nuaym-TamilMisc-.
Thibbun-Nabawi-Abu-Nuaym-Shamila-467.
Thibbun-Nabawi-Abu-Nuaym-Alamiah-.
Thibbun-Nabawi-Abu-Nuaym-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹம்மாத் பின் காலித் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான செய்தி.
  • இதில் விமர்சனம் உள்ளது என்று இப்னுல் கய்யிம் அவர்களும், பழங்களின் சிறப்பு பற்றி வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவை என்று அஜ்லூனீ அவர்களும், இந்த செய்தியில் அறியப்படாதவர்கள் உள்ளனர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களும் கூறியுள்ளனர். இந்த தகவலை குறிப்பிட்ட அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் என்னுடைய பார்வையில் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார்.

(நூல்: அள்ளயீஃபா-165)

1 . இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: திப்புன் நபவீ-467 , 468 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.