தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-265

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் நபித்தோழர்களில்) சிலர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (எங்களிடத்தில் நகைச்சுவையாக பேசி) எங்களை சிரிக்கவைக்கிறீர்களே? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(al-adabul-mufrad-265: 265)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ قَالَ: حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ، عَنْ أَبِيهِ أَوْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،

قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تُدَاعِبُنَا؟ قَالَ: «إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا»


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-265.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-260.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24744-அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் பின் முஹம்மத் என்பவர் பற்றி சிலர் பாராட்டியும் கூறியுள்ளனர். சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், லைஸ் வழியாக முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்றும், பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர். இவர் அறிவிக்கும் சில செய்திகளை புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்கள் துணை ஆதாரமாகக் கூறியுள்ளார்.
  • சிலர் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் விமர்சித்துள்ளனர். இது பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறும்போது இவரின் கடைசிகாலத்தில் இவர் அறிவிக்கும் செய்திகளையே அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். இதன் காரணம் இவரின் பக்கத்து வீட்டாரான காலித் பின் நுஜைஹ் என்பவர் தான் பொய் கூறுபவர். இவர் ஹதீஸ்களை எழுதித்தரும்போது அதில் இடைச் செருகல் செய்து விடுவார். எனவே அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் நல்ல மனிதர் என்று கூறியுள்ளார். இவ்வாறே அபூஸுர்ஆ அவர்களும் இவர் வேண்டுமென்றே பொய் கூறுபவர் என்று நான் கருதவில்லை. இவர் ஹஸனுல் ஹதீஸ் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ளார். (சுருக்கம்)

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/354)

  • மேலும் இந்த செய்தியை லைஸ் அவர்களிடமிருந்து மற்றவர்களும் அறிவித்துள்ளனர் என்பதால் இது ஸஹீஹுன் லிகைரீ ஆகும்

மேலும் பார்க்க: திர்மிதீ-1990 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.