தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-10531

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். எனவே நானாக உங்களுக்கு அறிவிக்கும் வரை என்னிடம் எதையும் கேட்காதீர்கள்.

அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தை யார்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உனது தந்தை ஹுதாஃபா பின் கைஸ் என்பவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள். அவர் தன் தாயாரிடம் சென்றபோது, அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்களின் தாயார், நபி (ஸல்) அவர்களிடம் என்ன கேள்வியை கேட்டு வந்துள்ளாய்? என்று கடிந்துகொண்டார். நாங்கள் அறியாமைக்கால மக்களாக இருந்தோம். அறியாமைக்காலத்தில் கெட்ட நடத்தை உள்ளவர்களாக இருந்தோம் என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள், (இவ்வாறு கேள்வி கேட்டதால் என்ன பிரச்சனை?) எனது தந்தை யார் என்று தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டுதான் நபி (ஸல்) அவர்களிடம் அந்தக் கேள்வியை கேட்டேன் என்று கூறினார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹமது: 10531)

حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، لَا تَسْأَلُونِي عَنْ شَيْءٍ إِلَّا أَخْبَرْتُكُمْ بِهِ»

فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ: مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَبُوكَ حُذَافَةُ بْنُ قَيْسٍ» فَرَجَعَ إِلَى أُمِّهِ فَقَالَتْ: وَيْحَكَ، مَا حَمَلَكَ عَلَى الَّذِي صَنَعْتَ؟ فَقَدْ كُنَّا أَهْلَ جَاهِلِيَّةٍ، وَأَهْلَ أَعْمَالٍ قَبِيحَةٍ. فَقَالَ لَهَا: إِنْ كُنْتُ لَأُحِبُّ أَنْ أَعْلَمَ مَنْ أَبِي، مَنْ كَانَ مِنَ النَّاسِ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-10531.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-10312.




மேலும் பார்க்க: புகாரி-7288 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.