தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4082

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மஹ்தீ என்பவர் தோன்றுதல்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது பனூ ஹாஷிம் கிளையைச் சேர்ந்த சில இளைஞர்கள் முன்னோக்கி வருவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவர்களைப் பார்த்து கண்ணீர் வடித்தார்கள். அவர்களின் (முக) நிறம் மாறியது. உடனே நான், “உங்களது முகத்தில் நாங்கள் விரும்பாத ஒன்று (கவலை) தென்படுகிறதே” என வினவினேன். அதற்கு நபியவர்கள் “அஹ்லுல் பைத்தினரான எங்களுக்கு இம்மை வாழ்க்கையை விட மறுமை வாழ்க்கையை அல்லாஹ் தேர்வுசெய்துள்ளான். எனக்குப் பின்னர் எனது குடுப்பத்தினர் சோதனைகளை சந்திப்பார்கள்; விரட்டப்படுவார்கள்; நாடு  கடத்தப்படுவார்கள்.

பிறகு கிழக்கிலிருந்து ஒரு கூட்டம் புறப்படும். அவர்களுடன் கருப்புக்கொடிகள் இருக்கும். அவர்கள் நல்லதை வேண்டுவார்கள். அது அவர்களுக்கு வழங்கப்படாது. எனவே அவர்கள் சண்டையிடுவார்கள். உதவி செய்யப்படுவார்கள். இதன் பின் அவர்கள் கேட்டது அவர்களுக்கு வழங்கப்படும். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் ஆட்சிப் பொறுப்பை எனது குடும்பத்தைச் சார்ந்த ஒரு மனிதரிடம் ஒப்படைப்பார்கள்.

அவர்கள் அதில் அநீதியை நிரப்பியதைப் போன்று இவர் அதனை நீதத்தால் நிரப்புவார். உங்களில் யார் அந்நேரத்தை அடைகின்றாரோ அவர் அவர்களிடம் பனிக்கட்டியின் மீது தவழ்ந்தாவது செல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இப்னுமாஜா: 4082)

بَابُ خُرُوجِ الْمَهْدِيِّ

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ صَالِحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:

بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ أَقْبَلَ فِتْيَةٌ مِنْ بَنِي هَاشِمٍ، فَلَمَّا رَآهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، اغْرَوْرَقَتْ عَيْنَاهُ وَتَغَيَّرَ لَوْنُهُ، قَالَ، فَقُلْتُ: مَا نَزَالُ نَرَى فِي وَجْهِكَ شَيْئًا نَكْرَهُهُ، فَقَالَ: «إِنَّا أَهْلُ بَيْتٍ اخْتَارَ اللَّهُ لَنَا الْآخِرَةَ عَلَى الدُّنْيَا، وَإِنَّ أَهْلَ بَيْتِي سَيَلْقَوْنَ بَعْدِي بَلَاءً وَتَشْرِيدًا وَتَطْرِيدًا، حَتَّى يَأْتِيَ قَوْمٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَعَهُمْ رَايَاتٌ سُودٌ، فَيَسْأَلُونَ الْخَيْرَ، فَلَا يُعْطَوْنَهُ، فَيُقَاتِلُونَ فَيُنْصَرُونَ، فَيُعْطَوْنَ مَا سَأَلُوا، فَلَا يَقْبَلُونَهُ، حَتَّى يَدْفَعُوهَا إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ بَيْتِي فَيَمْلَؤُهَا قِسْطًا، كَمَا مَلَئُوهَا جَوْرًا، فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ، فَلْيَأْتِهِمْ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-4072.
Ibn-Majah-Shamila-4082.
Ibn-Majah-Alamiah-4072.
Ibn-Majah-JawamiulKalim-4080.




1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இப்ராஹீம் அன்னகஈ —> அல்கமா பின் கைஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, இப்னு மாஜா-4082 , முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-,

  • ஹகம் பின் உதைபா —> இப்ராஹீம் அன்னகஈ —> அஸ்வத் பின் யஸீத், அல்கமா பின் கைஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,

  • ஹகம் பின் உதைபா —> இப்ராஹீம் அன்னகஈ —> அபீதா அஸ்ஸல்மானீ, அல்கமா பின் கைஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: ஹாகிம்-,


2 . ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-4084 .

3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2269 ,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7494 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.